மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 8-வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோராக 277 ரன்களை பதிவு செய்துள்ளது.

ஹைதராபாத் ராஜீவ்காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 8-வது போட்டி நடைபெற்று வருகிறது. இது ஹைதராபாத்தின் ஹோம் மைதானம் என்பதால், அந்த அணி ஜெயிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

ஐபிஎல் வரலற்றில் அதிக ரன் குவித்து சாதனை படைத்த ஹைதராபாத்

இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் தேர்வு செய்தார். இந்த போட்டியின் மூலமாக டிராவிஸ் ஹெட் ஐபிஎல் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

அதில் மாயங்க் அகர்வால் 11 ரன்களில் ஆட்டமிழக்க டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து அரைசதம் அடித்து சாதனை படைத்தனர்.

ஐபிஎல் வரலற்றில் அதிக ரன் குவித்து சாதனை படைத்த ஹைதராபாத்

இந்த போட்டியில் டிராவிஸ் ஹெட் 18 பந்துகளில் 52 ரன்கள் எடுக்க, அபிஷேக் சர்மா 16 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார். பின்னர், ஹெட் 24 பந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 62 ரன்களில் ஆட்டமிழக்க, அபிஷேக் சர்மா 23 பந்துகளில் 3 பவுண்டரி, 7 சிக்சர் உள்பட 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

முதல் 10 ஓவரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 2 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு எய்டன் மார்க்ரம் மற்றும் ஹென்ரிச் கிளாசென் இருவரும் இணைந்து பந்தை நார் நாராக கிழித்தனர். மும்பை இந்தியன்ஸ் பவுலர்கள் யாரையும் விட்டு வைக்கப்படவில்லை.

ஐபிஎல் வரலற்றில் அதிக ரன் குவித்து சாதனை படைத்த ஹைதராபாத்

பும்ரா மட்டும் இதில் விதிவிலக்கு. இந்த போட்டியில் அறிமுகமான குவெனா மபகா, ஜெரால்டு கோட்ஸி, பியூஷ் சாவ்லா, ஷாம்ஸ் முலானி, ஹர்திக் பாண்டியா என்று ஒவ்வொரையும் விட்டு வைக்காமல் சரமாரியாக விளாசினர்.

ஹென்ரிச் கிளாசென் தன் பங்கிற்கு 23 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அசத்தினார். அதை தொடர்ந்து அதிரடியாக விளையாடிய கிளாசென் 34 பந்துகளில் 4 பவுண்டரி,7 சிக்சர் உள்பட 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஐபிஎல் வரலற்றில் அதிக ரன் குவித்து சாதனை படைத்த ஹைதராபாத்

இதே போன்று மார்க்ரம் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்கள் குவித்தார்.

ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன்னதாக 2013 ஆம் ஆண்டு ஆர்சிபி அடித்த 263/5 ரன்கள் தான் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. இந்த சாதனையை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here