தர்மபுரி தொகுதியில் சௌமியா அன்புமணி இராமதாசுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள அன்புமணி இராமதாஸ் மகள். தர்மபுரி பாமக வேட்பாளராக சவுமியா அன்புமணி களமிறக்கப்பட்டுள்ளார். அப்போது பிரச்சாரமும் சூடுபிடித்து வருகிறது. இதனிடையே ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
அந்த வீடியோவில் எனது அம்மா சௌமியா, சமூக அக்கறை நிறைந்தவர். இதனால் நிறைய விழிப்புணர்வுகளை பெண்களிடம் ஏற்படுத்தி வருபவர். பெண் பிள்ளைகளுக்கான உத்வேகம் தரக்கூடிய வகையில், வீர்யம் மிக்க பேச்சுக்களை அவர்களுக்கு வழங்கி வருபவர்.

அவரது மோடிவேஷனல் பேச்சுக்களுக்கு ஏராளமான பெண் ரசிகைகள் இருக்கிறார்கள்.
எனவே எனது தாய்க்கு நீங்கள் அனைவரும் ஆதரவு வழங்கி, ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்க இருக்கும் தர்மபுரி மக்களவை தொகுதிக்கான தேர்தலில் அவரை அதிக vote வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று, வீடு வீடாக பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார் அவரது மகள்.

அப்போது இத்தனை காலமும், தீவிர அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்த சௌமியா இந்த முறை புதிதாக போட்டியில் குதித்துள்ளார். சௌமியாவின் மொத்த குடும்பமும் அரசியல் துறையில் உள்ளவர்கள்.
எனவே, சிறு வயதில் இருந்தே அரசியல் சூழலுக்குள் வளர்ந்தவர் என்பதாலும், புகுந்த வீடும் அரசியல் தலைவர்களின் வீடு என்பதாலும், சௌமியாவின் அரசியல் வருகை புதிதாக பார்க்கப்படவில்லை.

ஆனால், நிறைய எதிர்பார்ப்பார்புகளை தொகுதியில் ஏற்படுத்தியிருக்கிறது. அன்புமணியை விட சௌமியா, அனைவரிடமும் கலகலப்பாக பழகக்கூடியவர். மக்களிடம் இறங்கி சென்று பேசக்கூடியவர். எளிதாக பழகக்கூடியவர்.
அதனால், தர்மபுரி தொகுதியில் சௌமியாவையே வேட்பாளராக களமிறக்கினால், பாமகவுக்கு பெருத்த பலத்தை பெற்றுத்தருவதுடன், பெண்கள் மத்தியில் புதிய தெம்பு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

அதற்கேற்றபடி தீவிரமான பிரச்சாரத்தை சௌமியா துவங்கிவிட்டார். அப்படித்தான், நேற்றைய தினமும், பாப்பிரெட்டி பகுதியில், சாலையோரங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது திடீரென அங்கு வந்த இளைஞர் ஒருவர் சௌமியாவிடம் சென்று, “10.5 சதவீத இடஒதுக்கீடு விஷயத்திலும், சாதிவாரியான கணக்கெடுப்பு விஷயத்திலும் பாஜக எதிர்ப்பு சொல்லியதே? அப்படியிருக்கும் போது, பாஜகவுடன் ஏன் கூட்டணி வைத்தீர்கள்” என்று கேட்டார்.

இந்த கேள்வியை சௌமியா உட்பட யாருமே அங்கு எதிர்பார்க்கவில்லை. எனினும் சௌமியா அந்த நபருக்கு பதிலளிக்க முயல்வதற்குள், அந்த இளைஞர் அங்கிருந்து சென்றுவிட்டார். இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
இது ஒருபுறமிருந்தாலும், பாஜகவுடன் கூட்டணி வைத்தது, பாமகவில் அதிருப்தியை தந்து வருவதாக செய்திகள் கசிந்த வண்ணம் உள்ளது.

வட மாவட்டங்களில் பாஜகவில் பொறுப்பில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் பாமகவிலிருந்து சென்றவர்கள் தான் என்றாலும், எல்லோரும் ஒருங்கிணைந்து செயல்படுவது சந்தேகம் தான் என்கிறார்கள்.
அரியலூர் பாமக நிர்வாகிகள் நம்மிடம் சொல்லும் போது, “கடந்த முறை வலுவான கூட்டணி வைத்தும், ஜெயங்கொண்டம், விருத்தாசலம் தொகுதிகளில் தோற்றதற்கு காரணமே திமுகவின் வலிமையான அடித்தளம் தான்.

ஆனால் இந்த முறை பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள போது, எப்படி வெற்றி பெற முடியும்? என்று கேள்வி எழுப்புகிறார்கள். அதுமட்டுமல்ல, வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை அதிமுக கொண்ட வந்த போது, அதை பாஜக கூட்டணியிலிருக்கும் சில கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த முறை மக்கள் ஆதரவை எப்படி பெற முடியும்? சாதிவாரி கணக்கெடுப்பை பாமக வலியுறுத்திய போது, அதை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது. ஆனால், பாஜக அமைதி காத்து வருகிறதே? இதற்கு என்ன காரணம்?

எனவே, பாமக – பாஜக கூட்டணியால் மேல்மட்ட தலைவர்கள் திருப்தியடைந்து கொள்ளலாமே தவிர, தொண்டர்களை திருப்திப்படுத்துவது கஷ்டம். தேர்தல் வேலைகளில் முழுமனதுடன் எப்படி வேலை செய்வார்கள் என்றே தெரியவில்லை” என நொந்து சொல்கிறார்கள் பாமக தரப்பில்.
அப்போது கூட்டணி காரணமாக இப்படியெல்லாம் அதிருப்திகள் வெடித்தாலும், பாமகவுக்காக, பாஜகவினர் தொடர்ந்து பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். எந்த விதமான விமர்சனங்களையும் கண்டுகொள்ளாமல், கூட்டணி வெற்றிக்காக, தாமரை தொண்டர்கள் களத்தில் குதித்துள்ளது கவனிக்கத்தக்கது.