தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 6-ம் தேதி சிதம்பரத்தை அடுத்த லால்புரத்தில் சிதம்பரம் விசிக வேட்பாளர், மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் ஆகியோரை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்ய வருகிறார்.

இதனையொட்டி அந்த இடத்தில் பிரமாண்ட மேடை மற்றும் தொண்டர்கள் அமருமிடம் உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பாஜக

அப்போது மேடை அமைக்கும் இடம் மற்றும் வாகனங்கள் வரும் இடம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு காவல்துறை மற்றும் கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார்.

இதை தொடர்ந்து அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறுகையில்;- தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகிற 6-ம் தேதி சிதம்பரத்தில் நடைபெற உள்ள தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.

கடந்த 10 ஆண்டுகளாக கச்சத்தீவு பிரச்சனை பற்றி பாஜக பேசாமல், தற்போது தேர்தலுக்காக பேசுகிறது – எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் கடந்த தேர்தலில் எதிர் எதிர் அணியில் இருந்தார். இப்போது திமுகவின் திட்டங்களால் ஈர்க்கப்பட்டு அவர் நமது அணிக்கு வந்திருக்கிறார். இதுவே வெற்றிக்கான துவக்கம்.

தமிழகத்தின் நலத்திட்டங்களால் ஒவ்வொரு மக்களும் பயன்பெற்றுள்ளார்கள். இதனால் முதல்வரின் காலை உணவு திட்டத்தை பார்த்து மற்ற மாநிலங்கள் பின்பற்றுகின்ற நிலை உள்ளது. அந்த அளவுக்கு தமிழக முதல்வர் சிறப்பாக செயல்படுகிறார்.

திமுக, முதல்வர் ஸ்டாலின்

திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் போதே மக்கள் 39 தொகுதிகளிலும் வாக்களித்து வெற்றி பெற செய்தார்கள். தற்போது திமுக ஆளுங்கட்சியாக இருக்கிறது. அப்போது 3 ஆண்டுகளில் எண்ணற்ற மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம்.

அப்போது மகளிர் இலவச பேருந்து, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் உயர்கல்விக்கு செல்லும் போது மாதம் ஆயிரம் என ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஏதாவது ஒரு வகையில் நிதி செல்கிறது.

பிரதமர் மோடி

பின்பு மக்கள் நேரடியாக பயன்படுத்தும் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. பாஜக 400 இடங்களில் வெற்றி பெறும் என்று சொல்கிறார்கள். அதில் ஏதோ சூழ்ச்சி இருப்பதாக சந்தேகம் ஏற்படுகிறது. அப்போது நாட்கள் செல்ல செல்ல வெற்றி பெற முடியாது என பாஜக நினைக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளாக கச்சத்தீவு பிரச்சனை பற்றி பாஜக பேசாமல், தற்போது தேர்தலுக்காக பேசுகிறது. இது நாடகமாடும் வேலை. திமுக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும், என்றார்.

எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் அப்பு சந்திரசேகர், புவனகிரி ஒன்றிய செயலாளர் மனோகர்,

அப்போது மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பொறியாளர் கார்த்திகேயன், நகர துணை செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், இளங்கோ, இளைஞர் அணி மக்கள் அருள், தகவல் தொழில் நுட்பபிரிவு ஸ்ரீதர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here