குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. தற்போது 17-வது ஐபிஎல் தொடரின் 7-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.

குஜராத் டைட்டன்ஸ் அணியை ஓடவிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்பின் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது.

சென்னை அணியில் அதிகபட்சமாக சிவம் துபே 51 ரன்களும், ரச்சின் ரவீந்திரா மற்றும் ருத்துராஜ் கெய்க்வாட் ஆகியோர் தலா 46 ரன்களும் எடுத்தனர்.

குஜராத் டைட்டன்ஸ் அணியை ஓடவிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி

இதன்பின் 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடின இலக்கை துரத்தி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி, சென்னை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆரம்பத்தில் இருந்தே தடுமாறியது.

அப்போது கேப்டன் சுப்மன் கில் 8 ரன்னிலும், விக்கெட் கீப்பர் விர்திமான் சஹா 21 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி

அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களில் சாய் சுதர்சன் (37) மற்றும் டேவிட் மில்லர் (21) ஆகியோரை தவிர மற்றவர்கள் ஒருவர் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கூட ரன் குவிக்காமல் வந்த வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்த குஜராத் டைட்டன்ஸ் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

குஜராத் டைட்டன்ஸ் அணி தோல்வி

பந்துவீச்சில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக முஸ்தபிசுர், தீபக் சாஹர் மற்றும் தேஸ்பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி இடத்தில் முதலிடம் பிடித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here