குடியாத்தம் செங்குந்தர் சங்க கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் கலாட்டா சேர்களை மாறிமாறி வீசி கொண்டதால் சங்கத்தினர் ஓட்டம்.

வேலூர் மாவட்டம், அடுத்த குடியாத்தம் செங்குந்தர் சங்க கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் கலாட்டா செய்து, அமர்களம் செய்தனர். அப்போது சமீபத்தில் பாஜகவில் இணைந்த செங்குந்த மகாஜன சங்க தலைவர் ஈரோடு செல்வராஜ் பங்கேற்ற கூட்டம் பாதியில் முடிந்தததோடு, பெண்கள் அலறி ஓட்டம் பிடித்தனர்.

திமுக கவுன்சிலர்கள் கலாட்டா – சேர்களை மாறிமாறி வீசி சங்கத்தினர் ஓட்டம்

அதை தொடர்ந்து குடியாத்தத்தில் 7.4.2024 ஞாயிறன்று பிச்சனூர் பேட்டையில் கூட்டம் நடந்துள்ளது. அதில், பல்வேறு கட்சிகளில் இருக்கும் நிர்வாகிகள், சங்க உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த கூட்டத்தில் பாஜகவுக்கு வாக்களிக்கும்படி, செல்வராஜ் கூறியுள்ளார். இதற்கு திமுக, அதிமுகவில் இருக்கும் கட்சி நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பின்பு ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது.

திமுக

அப்போது கூட்டத்தில் இருந்து செல்வராஜ் வெளியேறினார். செங்குந்தர் முதலியார்களின் ஆதரவோடு நடைபெற்றுக் கொண்டிருந்த கூட்டத்தில் அமைதியாக நடைபெற்றுக் கொண்டிருந்த வேலூர் எம்.பி. தொகுதி பாஜக வேட்பாளரும் புதிய நீதிக் கட்சி தலைவருமான ஏ.சி.சண்முகம் பங்கேற்க, ஈரோடு செல்வராஜ் வாக்கு சேகரித்துள்ளார்.

பாஜக

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட நெசவாளர் அணி திமுக செயலாளரும் நகராட்சி கவுன்சிலருமான சி.என்.பாபு, எம்.எஸ்.குகன் தலைமையில் சென்ற திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் உடனடியாக கூட்ட அரங்கில் இருந்து ஏ.சி.சண்முகம் வெளியேறிய நிலையில், திமுகவில் தமது கோரிக்கைகள் நிறைவேற்றவில்லை. இடைத்தேர்தல், சட்டப்பேரவை தேர்தலில் ஆதரவு அளித்தும் எம்எல்ஏக்கள் யாரும் தனக்கு சால்வை அணிவிக்கவில்லை என செல்வராஜ் கூறியுள்ளார்.

திமுக கவுன்சிலர்கள் கலாட்டா – சேர்களை மாறிமாறி வீசி சங்கத்தினர் ஓட்டம்

அதற்கு, “ஆதரவு கொடுக்கும் போது தலைமைக்கு செல்கிறீர்கள், பிறகு எதற்கு சால்வை வேண்டும் என கேட்கிறீர்கள். நீங்க சங்கம் சார்பாக எப்போது வேண்டுமானாலும் வந்து செல்லுங்கள். அப்போது கூட்டத்துக்கு வந்து வாக்கு வாக்கு கேட்காதீர்கள்.

திமுக கவுன்சிலர்கள் கலாட்டா – சேர்களை மாறிமாறி வீசி சங்கத்தினர் ஓட்டம்

குடியாத்தம் நகராட்சியில் 24 சமுதாய கவுன்சிலர்கள் இருக்கிறார்கள். எங்களுக்கு கட்சி தான் முக்கியம்’ என கவுன்சிலர் பாபு கூறியுள்ளார். இந்த வாக்குவாதத்தின் முடிவில் செல்வராஜ் அங்கிருந்து சென்று விட்டார்.

திமுக கவுன்சிலர்கள் சேர்களை மாறிமாறி வீசி கலாட்டா சம்பவம் அரசியல் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here