காங்கிரஸ் தேர்தல் அறிக்கை நக்சலைட், தீவிரவாதிகள் அறிக்கை போல உள்ளது – ஏ.ஜி சம்பத்..!

2 Min Read

தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் 15 இடங்களில் வெல்லும். காங்கிரஸ் தேர்தல் அறிக்கை நக்சலைட் தீவிரவாதிகள் அறிக்கை போல உள்ளது. விழுப்புரத்தில் பாஜக மாநில துணைத்தலைவர் ஏ.ஜி சம்பத் பேட்டி.

- Advertisement -
Ad imageAd image

இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை என்கிற வாதத்தை முன் வைத்தது காங்கிரஸ் தான். அதன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தான். மோடி இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் அல்ல. பிரிவினை வாதத்தையும், மதவாதத்தையும் காங்கிரஸ் தான் செய்கிறது.

பிரதமர் மோடி

பாகிஸ்தான் பிரிவினைக்கும் முக்கிய காரணம் நேரு தான். கிழக்கு பாகிஸ்தான் என்ற நாட்டை பிரித்து பங்களாதேஷ் என அறிவித்தவர் இந்திரா காந்தி. காங்கிரசின் தேர்தல் அறிக்கை தீவிரவாதிகள் அறிக்கை போல உள்ளது.

பாஜக

மாவோயிஸடுகள், நக்சல்பாரிகள் அறிக்கை போல உள்ளது. காங்கிரஸ் கம்யூனிஸ்ட் இந்தியா முழுவதும் ஒரு விதமான கூட்டணியும் கேரளாவில் காங்கிரஸுக்கு எதிராக கம்யூனிஸ்ட் கூட்டணியும் உள்ளது.

காங்கிரஸ்

ராகுல் காந்தியை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய தலைவர் ராஜா மனைவி போட்டியிடுகிறார். சாதி வார கணக்கெடுப்பை பாமக சமூக நீதி பார்வையோடு கருதுகிறது. காங்கிரஸ் சமூக பொருளாதார கணக்கெடுப்பு என்று அறிவிக்கிறது.

இஸ்லாமியர்கள்

எஸ்சி எஸ்டி 50 சதவீத இட ஒதுக்கீட்டை சிறுபான்மையினருக்கு வழங்க வேண்டும் என்கிறது காங்கிரஸ் அறிக்கை. சாதி இந்துக்களின் சொத்துக்களை சூரையாடுவதற்கு தயாராக இருக்கிறது காங்கிரஸ்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை நக்சலைட், தீவிரவாதிகள் அறிக்கை போல உள்ளது – ஏ.ஜி சம்பத்

காங்கிரஸ் அறிக்கை பின்னணியில் அண்டை நாடுகளில் தூண்டுதல் உள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சுங்கச்சாவடிகளை அகற்றுவோம் என்று அறிவித்திருக்கிறது அதற்கான திட்டம் என்ன என்று அறிவிக்கவில்லை.

தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் 15 இடங்களில் வெல்லும். காங்கிரஸ் பிரிவினை வாதத்தை தூண்டுகிறது என்று செய்தியாளர் சந்திப்பில் பாஜக துணைத்தலைவர் ஏ.ஜி சம்பத் தெரிவித்தார்.

Share This Article
Leave a review