இந்தியாவிலேயே மிகப்பெரிய ஊழல் : பாஜக தேர்தல் நன்கொடை பத்திரம் தான் – செல்வப்பெருந்தகை..!

1 Min Read
செல்வப்பெருந்தகை

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மும்பையில் இருந்து நேற்று காலை விமானத்தில் சென்னை வந்தார். அங்கு அவர் அளித்த பேட்டி;- ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

- Advertisement -
Ad imageAd image

இந்தியா கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் இந்திய தேசத்தை பாதுகாக்க வேண்டும் என எழுச்சியுரை ஆற்றி பேசினார்கள். இதனால் மும்பை உள்பட நாடு முழுவதும் ஒரு எழுச்சி ஏற்பட்டுள்ளது.

செல்வப்பெருந்தகை

அப்போது தேர்தல் நிதி பத்திர விவகாரத்தில், பாஜக என்ன கணக்குகளை சொன்னாலும், உச்சநீதிமன்றம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்று சொன்ன பின்பு பொது வெளியில் வெளியிட ஏன் அச்சப்பட்டார்கள்.

தற்போது ஸ்டேட் பேங்க் வாய்தா வாங்கியது ஏன்? பயம் இல்லை என்றால், நேர்மையாக இருந்தால், வெளியிட்டு இருக்க வேண்டியதுதானே. அப்போது நேர்மை தவறி எப்படியாவது தேர்தலுக்கு முன்பு வெளியிடுவதை தவிர்க்க திட்டமிட்டார்கள். ஆனால் உச்சநீதிமன்றம் தலையிட்டதால், வேறு வழியின்றி வெளியிட்டார்கள்.

பாஜக தேர்தல் நன்கொடை பத்திரம் தான்

மேலும் ரூ.500 கோடி முதலீடு செய்த ஒரு நிறுவனம், ரூ.400 கோடி தேர்தல் நிதி தந்தது எப்படி? இது பற்றி போகப் போக மக்களுக்கு உண்மை தெரிய வரும். பாஜக தேர்தல் நிதி பத்திரத்தில், மிகப்பெரும் தவறு செய்துள்ளது.

பகை நாடுகள், இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் வெளிநாடுகள் போன்றவைகளில் இருந்தும், பாஜகவுக்கு நிதி வந்ததாக சொல்கின்றனர்.

செல்வப்பெருந்தகை

இந்தியாவிலேயே மிகப்பெரிய ஒரு ஊழல், பாஜக தேர்தல் நன்கொடை பத்திரம் தான். இதுபற்றி இப்போது, வடமாநில மக்களும் கேள்வி கேட்க தொடங்கி விட்டனர். பாஜக அதற்கு பதில் சொல்லி ஆக வேண்டும்.

Share This Article
Leave a review