இந்தியா கூட்டணியை கைதூக்கிவிட்ட உ.பி – பாஜகவுக்கு பலத்த அடி..!

3 Min Read

நாட்டின் மக்களவை தேர்தலில் 80 தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேச மாநிலமே, பாஜக கடந்த 2014-ல் 71 தொகுதிகளையும், 2019-ல் 62 தொகுதிகளை கைப்பற்றியது. இதன் மூலம் வலுவான பலத்துடன் ஒன்றியத்தில் ஆட்சி அமைத்தது. ஆனால் இம்முறை உபியில் பாஜகவுக்கு பலத்த அடி விழுந்துள்ளது.

- Advertisement -
Ad imageAd image

75 தொகுதியில் போட்டியிட்ட பாஜகவுக்கு 32 இடங்கள் மட்டுமே கிடைத்தது. அதேசமயம், உபி இம்முறை இந்தியா கூட்டணிக்கு கைகொடுத்துள்ளது. இங்கு இந்தியா கூட்டணியில் 62 தொகுதியில் போட்டியிட்ட சமாஜ்வாடி 33 தொகுதிகளிலும், 17 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 6 தொகுதியையும் கைப்பற்றி உள்ளன.

மக்களவை தேர்தல்

இதன்மூலம் உபியின் 80 தொகுதிகளில் இந்தியா கூட்டணிக்கு 44 இடங்களும், பாஜக கூட்டணிக்கு 36 இடங்களும் கிடைத்துள்ளன. பீம் ஆர்மி தலைவரான ஆசாத் சமாஜ் கட்சியின் சந்திரசேகர் நாகினா தொகுதியில் பாஜக வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

உபியில் பாதிக்கு பாதி தொகுதிகள் இந்தியா கூட்டணிக்கு கைமாறியதால் பாஜகவின் கணக்கு கடுமையாக சரிந்தது. உபியில் பிரதமர் மோடி மற்றும் 11 ஒன்றிய அமைச்சர்கள் போட்டியிட்டனர்.

அதில் அமேதி தொகுதியில் போட்டியிட்ட ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி (3,72,032), காங்கிரஸ் வேட்பாளரான காந்தி குடும்பத்தின் விசுவாசி கிஷோரி லாலிடம் (5.39.228) 1 லட்சத்து 67 ஆயிரத்து 196 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

பாஜக

மக்களவை தேர்தலில் வருண்காந்திக்கு இந்த முறை பிலிபித் தொகுதியை ஒதுக்க பாஜக மறுத்துவிட்டது. ஆனால் அவரது தாயார் மேனகாகாந்திக்கு சுல்தான்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டது. பிலிபித் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஜிதின் பிரசாதா 1,63,589 ஓட்டு வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார்.

ஆனால் சுல்தான்பூர் தொகுதியில் மேனகாகாந்தி 43 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் சமாஜ்வாடி வேட்பாளர் ராம்பவுல் நிசாத்திடம் பின் தங்கினார். உபி வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி 6,12,970 வாக்குகள் பெற்று,

தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராயை (4,60,457) 1 லட்சத்து 52 ஆயிரத்து 513 வாக்கு வித்தியாசத்தில் வென்று ஹாட்ரிக் வெற்றி பெற்றார்.

காங்கிரஸ்

ஆனாலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய ஆரம்ப சுற்றுகள் சிலவற்றில் பிரதமர் மோடி பின் தங்கியிருந்தது பாஜகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தொகுதியில் இருந்து பிரதமர் மோடி 3வது முறையாக மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஆனால், அவரது வாக்கு வித்தியாசம் கணிசமாக குறைந்துள்ளது, வாரணாசியிலேயே மோடிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதை உறுதிபடுத்தியுள்ளது. கடந்த 2014ல் நடந்த தேர்தலில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆம்ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை விட பிரதமர் மோடி 3,71,784 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார்.

கடந்த 2019-ல் வாக்கு வித்தியாசம் 4,79,505 ஆக அதிகரித்தது. இந்த முறை வாக்குவித்தியாசம் ஒன்றரை லட்சமாக குறைந்துவிட்டது. சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் உபி கன்னாஜ் தொகுதியில் 6,21,701 வாக்குகள் பெற்று 1,70,922 வாக்கு வித்தியாசத்தில் பாஜகவின் சுப்ரத் பதக்கை வென்றார்.

‛இந்தியா’ கூட்டணி

அகிலேஷின் மனைவி டிம்பிள் யாதவ் மெயின்புரியில் போட்டியிட்டு 5,98,526 வாக்குகள் பெற்று 2,21,639 வாக்கு வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் ஜெய்வீர் சிங்கை வீழ்த்தினார்.

இவர்கள் உட்பட யாதவ் குடும்பத்திலிருந்து 5 பேர் போட்டியிட்டு ஐவரும் இம்முறை வென்றுள்ளனர். அசம்கரில் சமாஜ்வாடியின் தர்மேந்திர யாதவ், பிரோசாபாத்தில் ராம் கோபால் யாதவின் மகன் அக்‌ஷய் யாதவ், பதான் தொகுதியில் சிவ்பால் யாதவின் மகன் ஆதித்யா யாதவ் ஆகியோரும் வெற்றி பெற்றனர்.

பிரதமர் மோடி

அயோத்தி ராமர் கோயில் கட்டியதை மிகப்பெரிய சாதனையாக பாஜக பிரசாரம் செய்த நிலையில், அயோத்தி மாவட்டம் அடங்கிய பைசாபாத் தொகுதியில் பாஜக தோல்வியை சந்தித்தது.

அங்கு போட்டியிட்ட பாஜக வேட்பாளர் லல்லு சிங் (4,99,722) 54,567 வாக்கு வித்தியாசத்தில் சமாஜ்வாடியின் அவதேஷ் பிரசாத்திடம் (5,54,289) தோல்வி அடைந்தார்.

Share This Article
Leave a review