தமிழக அரசையும், மாநகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து அருந்ததியர்கள் உள்ளிருப்பு போராட்டம்..!

2 Min Read

தமிழக அரசையும் மாநகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து அருந்ததியர்கள் உள்ளிருப்பு போராட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -
Ad imageAd image

கன்னியாகுமரி மாவட்டம், அடுத்த நாகர்கோவில் அருகே அருந்ததியர் காலணியில் வசித்து வரும் மக்கள் ஜந்து தலைமுறைகளாக தங்களுக்கு பட்டா வழங்க மறுக்கும் தமிழக அரசையும் மாநகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து அருந்ததியர் காலனியில் காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக அரசையும், மாநகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து அருந்ததியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

மேலும் வரும் பாராளுமன்ற தேர்தலில் தங்களுக்கு பட்டா பெற்று தரும் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் இல்லை என்றால் தேர்தலை புறக்கணிப்பதாகவும் என தெரிவித்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம், அடுத்த நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணன் கோவில் பகுதியில் உள்ள அருந்ததியர் காலணியில் சுமார் ஐந்து தலைமுறையாக 200-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

தமிழக அரசையும், மாநகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து அருந்ததியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

தற்போது திருவாங்கூர் மன்னர் இந்த மக்களுக்காக அந்த நிலத்தை வழங்கி உள்ளார். இந்த நிலையில் சுமார் ஐந்து தலைமுறைகளாக வசித்து வரும் இவர்கள் தங்களுக்கு இலவச பட்டா வேண்டும் என பல வருடங்களாக போராடி வருகின்றனர்.

ஆனால் தற்போது மாநகராட்சி நிர்வாகம் இவர்களுக்கு பட்டா வழங்க மறப்பதாகவும் இவர்களுக்கு மாற்று குடியிருப்புகள் வழங்குவதால் இங்கிருந்து காலி செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றது.

தமிழக அரசையும், மாநகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து அருந்ததியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கடந்த ஆண்டு நடைப்பெற்ற சாலை மறியல் போராட்டத்தில் போலீசாருக்கும் அருந்திய மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தனர்.

இந்த நிலையில் தற்போது தேர்தல் வரும் நேரத்தில் தங்களுக்கு பட்டா பெற்று தரும் கட்சிக்கும் வேட்பாளருக்கும் தாங்கள் வாக்களிக்க தயாராக உள்ளோம் இல்லை என்றால் இந்த தேர்தலை புறக்கணிப்பதாகவும் தெரிவித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அருந்ததியர்கள்

ஆனால் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வந்தும், எந்த முன்னேற்றமும் இல்லலதாதை தொடர்ந்து, காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தேர்தலை புறக்கணிக்க இருப்பதாகவும் தெரிவித்து குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு அருந்ததியர் இன கட்சிகள் கம்யூனிஸ்ட் கட்சிகள் பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Share This Article
Leave a review