கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த காடம்பாறை அப்பர் ஆழியார் பகுதியில் மிரட்டிய ஒற்றை காட்டு யானை அரசு பேருந்தை தாக்க முற்பட்ட போது சாமர்த்தியமாக பேருந்து இயக்கிய ஓட்டுனர்.
கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த காடம்பாறை மற்றும் அப்பர் ஆழியார் பகுதியில் காட்டு யானை ஒன்று அரசு பேருந்தை தாக்கம் முற்பட்டது. அப்போது சாமர்த்தியமாக பேருந்தை ஓட்டிய ஓட்டுநருக்கு பொதுமக்கள் பாராட்டு. கோவை மாவட்டம், சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி காட்டு யானைகள் வந்து செல்வது வழக்கமாக இருக்கிறது. இவை அனைத்தும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளதால் எப்போதும் இந்த பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படும்.

இந்த காட்டு யானைகள் வனபகுதியில் இருந்து உணவுக்காக குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சாப்பிடுவதும், குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மக்களை தாக்குதல் போன்ற இன்னல்கள் ஏற்படுகிறது. இதனால் அப்பகுதியில் இருக்கும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இருந்து அட்டகட்டி காடம்பாறை மற்றும் வெள்ளி முடி பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதிக்கு பொள்ளாச்சியில் இருந்து அரசு பேருந்து அட்டகட்டி வழியாக காடம்பாறை நோக்கி செல்வது வழக்கம் நேற்று இரவு அந்த பகுதியில் பேருந்து சென்ற போது மரப்பாலம் அருகில் இருந்து ஒரு காட்டு யானை அரசு பேருந்தை துரத்தியது.

இதனைக் கண்ட பேருந்து ஓட்டுநர் ஹாரன் அடித்ததால் ஆக்ரோசத்துடன் கோபம் கொண்ட காட்டு யானை பேருந்தை தாக்க முற்பட்டு பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் சாமர்த்தியமாக ஹாரனை இடைவிடாது அடித்து யானையை துரத்தியதால் அப்பகுதியில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதிக்கு யானை சென்றது. அதன் பின்னர் பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டு பேருந்து அந்த வழித்தடத்தில் இயங்கி உள்ளது.
மேலும் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பாக இந்த ஒற்றைக் காட்டு யானை அப்பகுதியில் மின் ஊழியர் காரை சேதப்படுத்தியது என குறிப்பிடத்தக்கது. எனவே வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.