கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷர்வன்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; மாவட்ட சமூக நல அலுவலகத்தின் வாயிலாக விதவை கணவனால் கைவிடப்பட்டவர், மாற்றுத்திறனாளி, பெண்கள் மற்றும் ஆதரவற்ற ஏழைப் பெண்களுக்கு சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச நவீன தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் தகுதி வாழ்ந்த பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திட வருவாய் வட்டாட்சியரிடம் இருந்து பெறப்பட்ட வருமானச் சான்று ஆண்டு வருமானம் ரூபாய் 72 ஆயிரம்க்குள் இருக்க வேண்டும். வட்டாட்சியரிடம் பெறப்பட்ட இருப்பிடச் சான்று பதிவு பெற்ற தையல் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட தையில் பயிற்சி சான்று பதிவு பெற்ற தையல் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட தையல் பயிற்சி சான்று குறைந்தபட்சம் ஆறு மாதம் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது சான்று பள்ளியில் இருந்து பெறப்பட்ட மதிப்பெண் சான்று, மாற்றுச் சான்று, பிறப்புச் சான்று, அல்லது மருத்துவரிடம் பெறப்படும் வயது சான்று, வயது வரம்பு 20 முதல் 40 வரை ஜாதி சான்,று விண்ணப்பதாரரின் புகைப்படம், கடவுச்சீட்டு அளவு 2 வட்டாட்சியரிடம் இருந்து பெறப்பட்ட விதவை கணவனால் கைவிடப்பட்டவர் ஆதரவற்றோர் என்பதற்கான சான்று ஆதர அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிச் சான்று சேர்த்து அருகில் உள்ள இ- சேவை மையத்தில் வரும் 9 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.