திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தென் மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக நேற்று வருகை தந்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று காலை தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் உள்ள காமராஜ் காய்கறி மார்க்கெட் பகுதிக்கு சென்று பொது மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தூத்துக்குடி மாநகர பகுதிகளின் தினசரி சந்தை உட்பட பல்வேறு பகுதிகளில் தமிழக முதல்வர் நடைபயிற்ச்சி செய்தும் வாகனம் மூலம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் வாக்கு சேகரிப்பின் போது திடிரென ஒரு மீனவர் வீட்டிற்குள் சென்று தேநீர் அருந்தி வாக்கு சேகரித்தார்.

வாக்கு சேகரித்தார் – தமிழக முதல்வர்

தூத்துக்குடி நாடாளுமன்ற மன்ற தொகுதியில் திமுக சார்பில் இரண்டாவது முறையாக போட்டியிடும் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதியை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகை தந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில் வாகனத்தில் சென்றவாறு பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தார்

பின்னர் தூத்துக்குடி காமராஜர் தினசரி காய்கறி சந்தையில் நடந்து சென்று அங்குள்ள வியாபாரி மற்றும் பொதுமக்களை சந்தித்து காய்கறிகள் வரத்து காய்கறிகள் தரம் ஆகியவை குறித்து கேட்டறிந்து வாக்குகளை சேகரித்தார்.

மீனவர் வீட்டிற்குள் சென்று தேனி நீர் அருந்தி வாக்கு சேகரித்தார் – தமிழக முதல்வர்

அப்போது காய்கறிகள் வாங்க வந்த தூத்துக்குடி காமராஜர் நகரை சேர்ந்த மேரி என்ற பெண் தான் காய்கறிகள் வாங்க கொண்டு வந்த 2 ஆயிரம் ரூபாயை தவறவிட்டு விட்டதாக முதல்வரிடம் கண்ணீர் மல்க கூறினார். உடனடியாக அந்த பெண்ணிற்கு தமிழக முதல்வர் 2 ஆயிரம் ரூபாயை வழங்கினார்.

மீனவர் வீட்டிற்குள் சென்று தேனி நீர் அருந்தி வாக்கு சேகரித்தார் – தமிழக முதல்வர்

பின்னர் வாகனம் மூலம் தூத்துக்குடி பள்ளிவாசல் வழியாக சென்று சாலைகளில் சென்றவர்களிடம் வாக்குகளை சேகரித்தார். இதனை தூத்துக்குடி லையன்ஸ் ஸ்டோன் பகுதியில் நடந்து வீதி வீதியாக சென்று தமிழக முதல்வர் பொதுமக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்து வருகின்றார்.

வாக்கு சேகரித்தார் – தமிழக முதல்வர்

அப்போது வாக்கு சேகரிப்பின் போது லயன்ஸ்டோன் பகுதியில் உள்ள சூசை தப்பாஸ் என்ற மீனவர் வீட்டிற்குள் திடிரென சென்ற முதல்வர் அவர்களிடம் வாக்கு சேகரித்து அந்த மீனவர் வீட்டில் அமர்ந்து தேநீர் அருந்தினார்.

பின்னர் தூத்துக்குடி மாநகர பகுதி முக்கிய சாலைகள் வழியாக வாகனத்தில் சென்றபடி தமிழக முதல்வர் கனிமொழி கருணாநிதியை ஆதரித்து பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தார்.

வாக்கு சேகரித்தார் – தமிழக முதல்வர்

இந்த வாக்கு சேகரிப்பின் போது பொதுமக்கள் செல்பி எடுத்தும் கைகளை கொடுத்தும் மகிழ்ந்தனர். இதைபோல் தெரு வீதிகளில் தமிழக முதல்வர் வாக்கு சேகரிப்பு செய்த போது அந்த பகுதிகளில் இருந்த குழந்தைகளை கையில் தூக்கி கொஞ்சி மகிழ்ந்தார்.

தமிழக முதல்வரின் இந்த வாக்கு சேகரிப்பின் போது வேட்பாளர் கனிமொழி கருணாநிதி மற்றும் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜூவன் மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here