விழுப்புரம் அருகே தனி வாக்குச்சாவடி அமைக்க கோரி பொதுமக்கள் போராட்டம். தனி வாக்குச்சாவடி அமைக்காவிட்டால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் அறிவிபபு.

விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சித்தேரி ஊராட்சியில் சுமார் 836 வாக்குகள் உள்ளது. கடந்த காலங்களில் அருகில் உள்ள வெள்ளேரிப்பட்டு கிராமத்தில் வாக்குச்சாவடி அமைத்து சித்தேரி கிராம மக்கள் அங்கு வாக்களித்து வந்திருந்தனர்.

விழுப்புரம் அருகே தனி வாக்குச்சாவடி அமைக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது சித்தேரி கிராமத்திற்கு என்று தனி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு வாக்காளர்கள் வாக்களித்து வந்த நிலையில் இந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சாவடி மையம் தேர்வு செய்யப்பட்டு தயாராகி,

இருக்கும் நிலையில் திடீரென வாக்குச்சாவடி அருகில் உள்ள வெள்ளேரிப்பட்டு கிராமத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

விழுப்புரம் அருகே தனி வாக்குச்சாவடி அமைக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

இதனை தொடர்ந்து கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அப்போது தேர்தல் ஆணையத்திற்கும் புகார் மனுவை அனுப்பி உள்ளனர். ஆனால் இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து வெள்ளேரிப்பட்டு கிராமத்தில் தான் வாக்குச்சாவடி என்கிற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

விழுப்புரம் அருகே தனி வாக்குச்சாவடி அமைக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

இதனால் கோபம் அடைந்த சித்தேரி கிராம மக்கள் 836 வாக்காளர்கள் உள்ள தங்களுக்கு தனி வாக்குச்சாவடி மையம் அமைக்க வேண்டும் என்று இன்று வாயில் கருப்பு துணி கட்டி கருப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தனி வாக்குச்சாவடி அமைக்காவிட்டால் தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் அறிவித்துள்ளனர். இதனால் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here