விழுப்புரத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் மேல் விளையாடி கொண்டிருந்த இருவருவர்களை மீது மின்சாரம் தாக்கியதில் ஒரு சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு சிறுவன் ஆபத்தான நிலையில் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விழுப்புரம் நகர பகுதியான விராட்டிக்குப்பம் சாலையில் உள்ள ராஜன் நகரில் புதியதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் மேல் விளையாடி கொண்டிருந்த ராஜ்குமார் என்பவரின் மகன் கிஷோர் ராகவ் (12) மற்றும் சிவக்குமார் என்பவரின் மகன் கிருத்விக் (7) இரு சிறுவர்களும் வீட்டின் மேலே விளையாடி கொண்டிருந்துள்ளனர்.

அப்போது வீட்டிம் மேல் அருகில் தாழ்வாக சென்ற மின் கம்பியை கிஷோர் ராகவ் (12) என்ற சிறுவன் பிடித்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு சிறுவன் மீது மின்சாரம் தாக்கி சிறுவன் கிருத்விக் ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து மேற்கு காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். உயிரிழந்த கிஷோர் ராகவ் சிறுவன் விடுமுறைக்காக பாட்டி வீட்டிற்கு வந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பரந்தாமன் என்பவர் கட்டி வரும் இந்த வீட்டில் வேலை செய்த கட்டிட தொழிலாளர் மின்சாரம் தாக்கி பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வீட்டின் கட்டுமானத்தை மாற்றி அமைக்க வலியுறுத்தி மின்சாரத்துறை, நகராட்சி நிர்வாகம் சார்பில் 6 முறை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இதனால் வீட்டின் கட்டுமானம் பாதியிலேயே நிறுத்தப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் வீட்டின் மேல் ஏறி விளையாடிய போது இந்த விபரீத சம்பவம் நடந்துள்ளது.
மேலும் இந்த பகுதி மக்கள் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை மாற்றி அமைக்ககோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.