திருமணம் ஆசை காட்டி இளம் பெண்ணை ஏமாற்றிய வாலிபருக்கு விழுப்புரம் கோர்ட்டில் பத்தாண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த வெள்ளம் புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிகாமணி மகன் வேல்முருகன் 31. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கணவரைப் பிரிந்து தாய் வீட்டில் தங்கியிருந்த 28 வயது பெண்யிருக்கும் பழக்கம் ஏற்பட்டது. வேல்முருகன் திருமணம் செய்து கொள்வதாக கூறியதை தொடர்ந்து இருவரும் நெருங்கி பழகினார். அந்தப் பெண் இரண்டு ஆண்டு திருப்பூரில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்த போது அவருடன் வேல்முருகன் தொடர்பில் இருந்தார்.

அந்தப் பெண்ணிடம் வேல்முருகன் கடன் 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி திருமணம் செய்து கொள்வதாக கூறி அவர் சேமித்து வைத்திருந்த 5 லட்சம் பணம் மற்றும் நகைகளை வாங்கிக்கொண்டு சொந்த ஊருக்கு சென்று பெற்றோரிடம் திருமணத்திற்கு சம்மதம் வாங்கிக்கொண்டு வருவதாக கூறி சென்றவர் அந்த பெண்ணிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டார். போனில் தொடர்பு கொண்டும் அந்தப் பெண்ணால் வேல்முருகனை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதனால் அந்த பெண் வெள்ளம் புதூரில் உள்ள வேல்முருகன் வீட்டிற்கு நேரில் சென்று திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினார்.

அதற்கு வேல்முருகன் மறுத்ததோடு அவரது தந்தை சிகாமணி, தாய் கோகிலா, சகோதரி கௌரி, சகோதரர் சுபாஷ் ஆகியோர் சேர்ந்து அந்த பெண்ணை திட்டி தாக்கினர். இதனால் மனமுடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றினார்.
இதுகுறித்து பெண்ணின் தந்தை அழைத்த புகாரின் பேரில் வேல்முருகன் உள்ளிட்டு ஐந்து பேரையும் கைது செய்த திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீசார் அவர்கள் மீது விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஹேர்மிஸ் குற்றம் சாட்டப்பட்ட வேல்முருகனுக்கு பத்தாண்டு சிறை தண்டனை மற்றும் ஒரு 11 ஆயிரம் அபராதம் விதித்தும் மற்ற நான்கு பேரை விடுவித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு எழுப்பிடாத ஐந்து லட்சம் அரசு வழங்க உத்தரவிட்டார்.