வேலூர் மாவட்டம், அடுத்த காட்பாடி பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு நண்பரின் மகளுக்கு கிளிதாண்பட்டறை காட்பாடி பகுதியை சேர்ந்த அப்துல் கனி (44) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

நண்பரின் மகளுக்கு பாலியல் தொல்லை குறித்து காட்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வழக்கு வேலூர் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இன்று நீதிமன்றத்தில் அப்துல் கனி மீது குற்றம் நிருபிக்கப்பட்டதால் போக்சோ நீதிமன்றத்தில் அவருக்கு 30 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் மேலும் ரூ.20 ஆயிரம் அபராதமும் அதனை கட்டதவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.