கும்மிடிப்பூண்டி அருகே இருசக்கர வாகனங்கள் மோதி பயங்கர …

1 Min Read
  • திருமணமாகி ஒரு மாதமே ஆன இளம் பெண் கணவன் கண்முன்னே துடித்து துடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -
Ad imageAd image

திருவள்ளூர் மாவட்டம் மதர்பாக்கம் அடுத்த பாதிரிவேடு கிராமத்தைச் ர்ந்தவர் நாகார்ஜுனா (28) இவர் கடந்த மாதம் விஸ்வ பிரியா 25 என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

இந்த நிலையில் குடும்ப விஷயமாக இருசக்கர வாகனத்தில் கணவன் மனைவி இருவரும் கவரப்பேட்டை நோக்கிச் சென்றுள்ளார் அப்போதே கும்மிடிப்பூண்டி அடுத்த குருராஜா கண்டிகையில் நேர் எதிர் திசையில் வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/a-student-from-thanjavur-has-set-a-record-by-winning-a-gold-medal-in-the-544th-silambam-competition-held-in-chennai/

இந்த விபத்தில் தலைகீழாக விழுந்த விஸ்வ பிரியாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பலத்த காயமடைந்த விஸ்வ பிரியா அழைத்துச் செல்ல காலதாமதமாக வந்த 108 அவசர ஊர்தி கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது.

சிகிச்சைக்காக வந்த மருத்துவர்கள் விஸ்வ பிரியா வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்ததை தொடர்ந்து விஸ்வ பிரியாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் 108 அவசர ஊர்த்திகாக விஸ்வ பிரியா காத்துக் கொண்டிருந்தபோது எடுத்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் திருமணமான ஒரே மாதத்தில் கணவன் கண் முன்னே மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Share This Article
Leave a review