தூத்துக்குடி சூறாவளி காற்று வீடியோ வைரல்.

1 Min Read
சூராவளி

தூத்துக்குடி மன்னார் வளைகுடா பகுதியில் சூறாவளி காற்று விச கூடும் என்ற வானிலை அறிக்கையை தொடர்ந்து, தூத்துக்குடி துறைமுகத்தில் ஒன்பதாவது கப்பல் தள பகுதியில் ஒரே இடத்தில் சூறாவளி காற்று  தரையில் இருந்து மேலே கிளம்பிய வீடியோ வைரல்.

- Advertisement -
Ad imageAd image

வங்கக்கடலில் ஒடிசா கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தம் உருவாகியுள்ளது. அதன் காரணமாக குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப் பகுதிகள், மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் 29 ஆம் தேதி வரை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

அதனை தொடர்ந்து, தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள 9வது கப்பல் நிறுத்தும் தளத்தில் இன்று திடீரென்று  சூறாவளி காற்று ஒரே இடத்தில் தரையில் இருந்து வான் நோக்கி சுழன்று அடித்தது. . இதனை துறைமுகத்தில் பணிபுரியும் பணியாளர் ஒருவர் அவர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

Share This Article
Leave a review