வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் புகார் கொடுத்தவரிடம் வழக்கை வாபஸ் வாங்க செய்த போலீஸ் டிஎஸ்பி.

0
46
பாதிக்கப்பட்ட ஏழுமலை

“நீ என்ன பெரிய இவனா புகார் கொடுத்தவங்களே வாபஸ் வாங்கிட்டாங்க, நீ யார் அவர்களுக்கு சப்போர்ட் பண்றதுக்கு.உன் மேல் டிபன்ஸ் கேஸ் வழக்கு பதிவு பண்ணி ஒன்றரை கோடி ரூபாய் நஷ்டம் வாங்கிடுவேன் வேறுமாதிரி  ஆயிடும் நான் பார்த்துகிட்டு இருக்கேன் உன்னை. என்னை சும்மா நினைக்காத” என நடுரோட்டில் இன்று ஆவேசமாக பேசிய வந்தவாசி டிஎஸ்பி கார்த்தி.

21.06.2023 அன்று செருப்பு தைக்கும் தொழிலாளி ஏழுமலை தன் கடைக்கு அருகில் மற்றும் ஒரு கடைக்காரர் இடத்தை அபகரிக்கும் நோக்கத்தோடு தட்டிகளை கட்டியுள்ளார் அதை ஏழுமலை கண்டித்துள்ளார் அதனை தொடர்ந்து அவர் தாக்கப்பட்டார்.
ஏழுமலை அரசு மருத்துவமனையில் வந்தவாசியில் அனுமதிக்கப்பட்டார் அங்கு வந்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வாக்குமூலம் பெற்று சென்றனர்.

அதனைத் தொடர்ந்து ஏழுமலை கொடுத்த வாக்குமூலத்தில் பெயர் தெரியாத அடையாளம் தெரிந்த நபர் என குறிப்பிட்டிருந்த வகையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இது ஒரு சம்பவம் இருக்க.
நேற்று மாலை தெள்ளார் பகுதியில் உள்ள அருந்ததியர் குடியிருப்பில் கோவில் திருவிழா நடத்துவதென முடிவு எடுத்து முத்துமாரியம்மன் கோவிலை ஜேசிபி இயந்திரம் மூலம் சுத்தம் செய்துள்ளனர்.

அங்கிருந்த குப்பைகள் அனைத்தும் ஒரு பக்கமாக சேகரித்து வைக்க. சேகரிக்கப்பட்ட குப்பைகளுக்கு அருகில் உள்ள வீட்டுக்காரர் அறிவாசு என்பவர் அந்த பகுதியில் உள்ள அருந்ததியர் பெண் செல்வியை ஆபாசமாக பேசி அவமானப்படுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து தெள்ளார் காவல் நிலையத்தில் செல்வி புகார் அளித்திருந்த நிலையில், இன்று காலை வந்தவாசி டிஎஸ்பி கார்த்திக் செல்வியை அழைத்து சமாதானம் பேசி புகாரை வாபஸ் வாங்க செய்துள்ளார்.
இதை அறிந்து தமிழ் புலிகள் கட்சியின் திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் துரை எஸ் பி அலுவலகத்தில் முறையிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து இன்று காலை முக்கிய கடைவீதியில் துரையை வழிமறித்து வந்தவாசி டிஎஸ்பி கார்த்திக் “உன் மேல் டிபன்ஸ் கேஸ் வழக்கு பதிவு பண்ணி ஒன்றரை கோடி ரூபாய் நஷ்டம் வாங்கிடுவேன் வேறுமாதிரி  ஆயிடும் நான் பார்த்துகிட்டு இருக்கேன் உன்னை என்னை சும்மா நினைக்காத வந்தவாசி அமைதி கெடுக்கணும்னு பார்க்காதே” என்று டிஎஸ்பி யூனிஃபார்ம் இல்லாமல் அன்யூனிப்பார்ம்ல வந்து கார்த்திகை மிரட்டி உள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. உண்மையில் நடந்தது என்ன திருவண்ணாமலை எஸ் பி விசாரித்து நடவடிக்கை வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
புகார் கொடுத்தவர்களுக்கு ஆதரவாக யார் வேண்டுமானாலும் வரலாம் என்பது நீதி அப்படி அவர்களுக்கு ஆதரவாக வருகிறவர்களை இது போன்ற காவல்துறை உயர் அதிகாரிகள் மிரட்டுவது என்பது இதுவே புதிதாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here