திருப்பூர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு – கைதான சிறார்களில் ஒருவர் தற்கொலை முயற்சி..!

2 Min Read

திருப்பூர் மாவட்டம், உடுமலையைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரது பெற்றோர் இருவரும் இறந்து விட்டனர். இதனால், அச்சிறுமி தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்தார்.

- Advertisement -
Ad imageAd image

கடந்த சில நாள்களாக சிறுமியின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள், சிறுமியை அரசு மருத்துவனைக்கு அழைத்து சென்று பரிசோதித்துள்ளனர்.

சிறுமி பாலியல்

அதில், அச்சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அச்சிறுமியிடம் உறவினர்கள் விசாரித்ததில், தனது வீட்டருகே இருக்கும் இளைஞர்கள் சிலர் தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்தார்.

இது தொடர்பாக உடுமலைப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில், அனைத்து மகளிர் போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமியை 9 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

உடுமலைப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையம்

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த அனைத்து மகளிர் போலீஸார் உடுமலையைச் சேர்ந்த ஜெயகாளீஸ்வரன் (19), மதன்குமார் (19), பரணிகுமார் (21), பிரகாஷ் (24), நந்தகோபால் (19), பவாபாரதி (22) மற்றும் 14, 15, 16 வயது சிறுவர்கள் என மொத்தம் 9 பேரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

இதில், சிறுவர்கள் மூவர் திருப்பூரில் உள்ள கூர்நோக்கு இல்லத்திலும் மற்ற 6 பேர் கோவை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

அரசினர் கூர்நோக்கு இல்லம்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 6 இளைஞர்களும் 3 சிறார்களும் என மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைதான இளைஞர்கள் ஆறு பேர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், மூன்று சிறார்களும் கோவை லட்சுமி மில்ஸ் பகுதியில் உள்ள அரசினர் கூர்நோக்கு இல்லத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

கைதான சிறார்களில் ஒருவர் தற்கொலை முயற்சி

இந்த நிலையில் 17 வயது சிறுவன் ஒருவர் நேற்றிரவு கைகளை கழுவுவதற்கு பயன்படுத்தப்படும் சோப்பு ஆயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அறிந்த அதிகாரிகள் அச்சிறுவனை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அந்த சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்பொழுது அந்த சிறுவன் உடல்நிலை தேறி விட்டதாக கூறப்படும் நிலையில் சிறுவனின் தற்கொலை முயற்சி குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share This Article
Leave a review