மத்தியில் இதே நிலை நீடித்தால் இந்தியாவில் ஜனநாயகம் இருக்காது -எங்களின் உணர்வுகளை தொட்டு பார்க்காதீர்கள். என் மகனை சிறைசாலைக்கு அனுப்புவதற்கு அச்சப்படவில்லை நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வேலூரில் பேச்சு.
வேலூர் மாவட்டம், வேலூரில் அண்ணாகலையரங்கம் அருகில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேலூர் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அதிமுக கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் தலைமையில் நடந்தது.

அதில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் மற்றும் கூட்டணி கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டனர். அதில் வேட்பாளர் கதிர் ஆனந்த் தனக்கு வாக்குகள் அளிக்குமாறு வாக்கு சேகரித்தார்.
தமிழக நீர் வளத்துறை அமைச்சரும் திமுக பொதுசெயலாளருமான துரைமுருகன் கலந்துகொண்டு பேசுகையில் பிரதமர் பெரிய மனிதர் தேர்தல் வாக்குறுதி இம்முறை அளிக்கவில்லை. கருப்பு பணத்தை மீட்டு மக்கள் வங்கி கணக்கில் 15 லட்சம் போடுவதாக சொன்னார்.

ஆனால் இப்போது நான் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்யவேன் என சொல்லவில்லை. ஆனால் நான் ஆட்சிக்கு வந்தால் திமுகவையும் தோழமை கட்சிகளையும் துடைத்து எறிவேன் என கூறுகிறார்.
சட்டம் ஒழுங்கு பராமரிக்கிறோம் காலை சிற்றுண்டி மகளிர்களுக்கு நல திட்டங்கள் மாணவர்களுக்கு ரூ.1000 மகளிர் இலவச பேருந்தை அளிக்கிறோம்.

இப்படி என்னற்ற திடங்களை தரும் எங்களை துடைத்து எறிவோம் என சொல்வது நியாயமா சென்னை திருநெல்வேலி தூத்துக்குடியில் வெள்ளம் அதற்காக நீங்கள் காலனா கொடுக்கவில்லை வந்தும் பார்க்கவில்லை. ஆனால் இப்போது மட்டும் 6 முறை வருகிறீர்கள் எங்கள் பணத்தை வெள்ளபாதிப்புகளை சரி செய்தோம்.
அதற்காக எங்களை துடைத்து எறிவீர்களா நான் கட்சியினுடைய பொதுசெயலாளர் நாங்கள் உங்களுக்கு எதிர்பாக என்ன செய்தோம் மகா பெரியவே பிரதமரே நீங்கள் ஒரு சந்தேக கேசிலாவது சிறை சென்றுள்ளீர்களா சந்தேக கேசில் சிறை சென்றால் பெருக்க துடைப்பம் கொடுப்பார்கள்.

அப்போது சிறையில் நாங்கள் தியாகம் செய்த கட்சி அடுத்து இஸ்லாமியர்களை பாதிக்கும் வகையில் வெளிநாட்டிலிருந்து ஜெயினர் புத்திஸ்டி, கிறிஸ்டியான் வரலாம். ஆனால் சாய்புகள் இலங்கை தமிழர்கள் வரகூடாது என கூறுகிறீர்கள் இவர்கள் என்ன துரோகிகளா நான் கேட்கிறேன்.
இந்த நாட்டில் பிறந்த இஸ்லாமியன் என்ன பாகிஸ்தான் மண்ணிலா பிறந்தான் என்ன கேட்கிறீர்கள். நீங்கள் சொல்வீர்கள் ஒரே நாடு ஒரே மதம் ஒரே தேர்தல் என சொல்வீர்கள். ராமருக்கு கோவிலை கட்டினீர்கள்.

அது போகட்டும் இது சர்வாதிகார நாடல்ல சமதர்ம நாடு நான் சத்தியம் செய்து சொல்கிறேன் இதே நிலை நீடித்தால் இந்தியாவில் ஜனநாயகம் இருக்காது. சிலர் நாட்டின் உள்ளே வரகூடாது என சட்டம் போட்டுள்ளனர்.
நாளை இரண்டு சான்றிதழ் இருக்கும் இஸ்லாமியர்கள் மட்டும் சொத்து வைத்திருக்கலாம் இல்லையென்றால் சொத்துக்கள் பறிமுதல் கைது என செய்வார்கள் என் வீட்டில் ரெய்டு செய்தனர். ஆனால் என் வீட்டில் இருந்து உண்மையாக நீங்கள் பணத்தை எடுத்தது உண்டா ஆனால் சத்தியம் வென்றது.

இப்போதும் சொல்கிறேன் அதற்கான ஆயுதங்களை செய்கிறார்கள் சிலர் வேட்பாளரை கைது செய்ய வேண்டும்.
கதிர் ஆனந்தை என கேட்கிறார்கள் சபாஷ் என் மகனை சிறைக்கு அனுப்பவும் தயார் துரைமுருகன் பேடி அல்ல கலைஞரால் வளர்க்கப்பட்ட காளை நான் பிரதமர் எங்களுடைய உணர்ச்சியை தொட்டு பார்க்காதீர்கள்.
என்னுடைய கட்சியை சந்தேகப்படாதீர்கள் என் கட்சியில் கைவைப்பேன் என சொல்லாதீர்கள் ரத்தம் கொதித்து போய் இருக்கிறது.

என் மனைவி மகன் எல்லாவற்றையும் விட நான் நேசிக்கும் என் கட்சி திமுக தாய்மார்களே பெரியோர்களே சூது வாது தெரியாது சொன்னதை செய்கிறவன் நாணயமானவனாக ஒழுக்கமானவனாக ஒரே தொகுதியில் பல தொடர்ந்து நின்று வெற்றி பெற்று வருகிறேன் என் மகனையும் அப்படி தான் வளர்த்துள்ளேன் என பேசினார்.