விசாரணைக்கு வந்த பெண்ணின் கன்னத்தில் பளார் என அறைந்த பெண் காவலர். உடல்நல கோளாறு ஏற்பட்டு சிகிச்சையில் பாதிக்கப்பட்ட பெண். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அப்போது புகார் அளிக்க சென்ற காவலரின் மனைவியை தாக்கிய பெண் காவலர் பாதிக்கப்பட்ட பெண் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விழுப்புரம் மாவட்டம், அடுத்த கானை அருகே உள்ள மாம்பழப்பட்டு கிராமத்தில் வசிப்பவர் எழிலரசி. இவரது கணவர் மதுரை வீரன். இவர் செஞ்சி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். அப்போது எழிலரசி மற்றும் அவரது கணவர் மதுரை வீரன் ஆகியோர் மாம்பழப்பட்டு கிராமத்தில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஏழிலரிசியின் உறவினர் பரசுராமன் என்பவர் வேலை நிமிர்த்தமாக கடன் ஏற்பட அதற்காக தனது இரண்டு பவுன் தங்கச்சங்கிலியை வழங்கி உள்ளார் எழிலரசி. அப்போது கடனாக கொடுத்த தங்கச்சங்கிலியை பலமுறை கேட்டும் பரசுராமன் திருப்பி தரவில்லை.

இதனால் எழிலரசி கானை காவல் நிலையத்தில் பரசுராமன் மீது புகார் அளித்தார். இந்த நிலையில் பரசுராமன் எழிலரசி தனக்கு பணம் தர வேண்டும் என்று கூற விசாரணை செய்த போலீசார் ஏழிலரசியிடம் இருந்து பணத்தை பெற்று பரசுராமனிடம் வழங்கியுள்ளனர்.
அத்துடன் எழிலரசி கடனாக கொடுத்த தங்க சங்கிலியையும் பரசுராமனிடமிருந்து பெற்று கொடுத்துள்ளனர். இந்த நிலையில் எழிலரசி காவல் நிலையத்தில் தனது உறவினர் பரசுராமனிடம் தன்னை இப்படி அவமானப்படுத்தி விட்டீர்களே என்று கேட்டுள்ளார்.

அதில் கானை காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலர் மகா என்பவர் எழிலரசியை தகாத வார்த்தைகளில் திட்டி” வெளியே போங்கள் இது என்ன உன் அப்பன் வீடா” என திட்டியுள்ளார்.
அது மட்டும் அல்லாமல் எழிலரசியை அவரது கணவன் மதுரை வீரன் காவலர் எதிரிலேயே அடித்துள்ளார் பெண் காவலர் மகா. எழிலரசி இதனால் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்.

அவருக்கு ஏற்கனவே நீரழிவு நோய் இருதய நோய் பாதிப்புகள் இருந்ததால் அவரை ஆம்புலன்ஸ் மூலமாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மேலும் எழிலரசியின் கணவர் மதுரை வீரனை ஆயுதப்படை காவலர் பிரிவுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது மாவட்ட காவல்துறை. தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் எழிலரசி.

தனக்கு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து உயர் அதிகாரிகளை சந்தித்து புகார் அளிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பெண் காவலர் மகா மீது எழிலரசி கொடுத்துள்ள புகாரினை வாபஸ் பெற கோரி தொடர்ந்து காவல்துறை மூலமாக அழுத்தம் அளிக்கப்பட்டு வருவதாக எழிலரசி தெரிவிக்கிறார்.

காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட பெண்ணை தாக்கிய வழக்கில் பெண் காவலர் மகா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எழிலரசியின் உறவினர்களின் கோரிக்கையாக உள்ளது.