விழுப்புரம் அருகே காதல் திருமணம் செய்து கொண்டதால் வீட்டில் உள்ள பொருட்களை அடித்து உடைத்த பெண் வீட்டார். புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காத காவல்துறை.
விழுப்புரம் அருகே முண்டியபாக்கம் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட இளைஞர் ஒருவர் வேறொரு சமூகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் பெண் வீட்டாருக்கும் பிடிக்கவில்லை. கடந்த 4 நாட்கள் முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

இது அறிந்த பெண் வீட்டார் முண்டியபாக்கம் உள்ள காதலன் வீட்டை அடித்து உடைத்து சூறையாடபட்டது. இது குறித்து விக்கிரவாண்டி காவல்துறைக்கு புகார் கொடுத்தும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

திமுக ஆதரவான அந்த பெண் வீட்டார் கத்தியுடன் சுற்றுவதாகவும் அந்த ஊரில் அந்த காதலன் வந்தால் வெட்டி கொலை செய்வதாக மிரட்டல் விடுத்து உள்ளனர். இது குறித்து காவல்துறைக்கு புகார் கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கைகள் இல்லை. சென்னையில் தற்போது ஒரு ஆணவக்கொலை நடைபெற்றது.

அதேபோல் விழுப்புரம் பகுதியில் நடைபெறாமல் இருக்க காவல்துறைகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.