விரைவில் பிக் பாஸ் 7., அக்டோபரில் ஒளிபரப்ப விஜய் டிவி முடிவு.!

0
71
விரைவில் பிக் பாஸ் 7., அக்டோபரில் ஒளிபரப்ப விஜய் டிவி முடிவு.!

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்க இருக்கிறது. இது குறித்த பல தகவல்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீசனில் இதுவரைக்கும் இல்லாத பல முயற்சிகளும் எடுக்கப்படுவதாக தெரிகிறது. அதே நேரத்தில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு பட்டியல் வெளியாக இருக்கிறது. அதையும் பார்க்கலாம் . விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதத்தில் இருந்து ஏழாவது சீசன் தொடங்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அதே நேரத்தில் இந்த சீசனிலும் நடிகர் கமல்ஹாசன் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறாராம். ஹிந்தியைப் போலவே தமிழிலும் ஓடிடியில் 24 மணி நேரமாக பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் தொடங்கினார்கள்.  இதே நேரத்தில் அதிகமான வரவேற்பையும் பெற்றிருந்தது. டிவிக்கு முன்பே டிஸ்னி ஹாட்ஸ்டாரில் இந்த நிகழ்ச்சியை பல ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து வந்தனர். இந்த நிலையில் இந்த சீசனிலும் வழக்கம் போல விஜய் டிவி பிரபலங்கள், வெளிநாட்டு மாடல்கள், சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் சர்ச்சைக்குரிய போட்டியாளர்கள், பாடகர்கள் என்ற வகையில் போட்டியாளர்களை களம் இறக்க திட்டமிட்டு அதற்கான பேச்சுவார்த்தை விஜய் டிவி தரப்பில் இருந்து நடைபெற்று வருகிறதாம்.

அதுமட்டுமல்லாமல் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் கமல்ஹாசனை வைத்து சென்னையில் இந்த சீசனுக்கு ப்ரோமோ சூட்டும் நடத்தி முடித்து இருக்கிறார்கள். அந்தப் ப்ரோமோ இந்த மாத இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இந்த சீசன் பற்றிய முக்கிய அப்டேட் ஒன்றும் வெளியாகி இருக்கிறது. அதாவது இதுவரைக்கும் இல்லாத வகையில் பிக் பாஸ் வீடு இரண்டு ஆக இருக்கப் போகிறது என்று கூறப்படுகிறது. இதுவரைக்கும் பிக் பாஸ் வீடு போன்ற ஒரு அமைப்பை உருவாக்கி வைத்திருப்பார்கள். அங்குதான் அனைத்து போட்டியாளர்களும் இருப்பார்கள். ஆனால் இந்த சீசனில் அந்த வீடு இரண்டு வீடாக இருக்கப் போகிறது என்று கூறப்படுகிறது.

எப்போதும் போல தான் போட்டியாளர்கள் இந்த சீசனும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இரண்டு வீடு என்பதினால் அதிகமான போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட மாட்டார்கள் என்றும் கூறப் படுகிறது. ஒரு வீட்டில் புதிய போட்டியாளர்களும் இன்னொரு வீட்டில் பழைய பிக் பாஸ் போட்டியாளர்களும் கலந்து கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. அதே நேரத்தில் இந்த சீசனில் பப்லு பிரிதிவிராஜ், சீரியல் நடிகர் தினேஷ், நடிகை ரேகா நாயர், கோவை பெண் பஸ் ஓட்டுனர் ஷர்மிளா, பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை பர்ஹானா,
சீரியல் நடிகை சம்யுக்தா போன்றோர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here