எப்படி இருக்கு ஜெயிலர்.! ரஜினியின் நம்பிக்கை காப்பாற்றப்பட்டதா.?

0
89
எப்படி இருக்கு ஜெயிலர்.! ரஜினியின் நம்பிக்கை காப்பாற்றப்பட்டதா.?

ரஜினியின் நடிப்பில் நெல்சனின் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம் இன்று வெளியாகிவுள்ளது. ரஜினிக்கும் சரி, நெல்சனுக்கும் சரி முந்தைய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனவே இருவரும் ஜெயிலர் படத்தை தான் மிகவும் நம்பியுள்ளனர்.

இப்படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக கொடுத்து தங்களை நிரூபிக்கும் நோக்கத்தில் உழைத்து வந்தனர். அதன் காரணமாகவே ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்து வந்தனர். அந்த வகையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இப்படத்திற்காக ரஜினி மற்றும் நெல்சன் உட்பட படக்குழுவினர் கடுமையாக உழைத்து தற்போது ஜெயிலர் திரைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

என்னதான் தமிழ்நாட்டில் ஜெயிலர் திரைப்படத்தின் முதல் காட்சி 9 மணிக்கு தான் துவங்குவதாக இருந்தாலும் அயல்நாடுகளிலும், அண்டை மாநிலமான கர்நாடகாவிலும் இப்படம் அதிகாலை ஆறு மணிக்கே திரையிடப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் இருக்கும் பல ரஜினி ரசிகர்கள் அதிகாலை காட்சியை காண பெங்களூருக்கு படையெடுத்தனர். இதன் காரணமாக அங்கு டிக்கெட் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது ஜெயிலர் FDFS காட்சியை பார்த்த ரசிகர்கள் அனைவரும் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களையே தந்து வருகின்றனர். ஜெயிலர் திரைப்படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதாகவும், படம் செம மாஸாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் ஒரு சிலர் காமெடி, ஆக்ஷன், செண்டிமெண்ட் என அனைத்தும் சேர்ந்த கலவையாக ஜெயிலர் திரைப்படம் இருப்பதாகவும், ஒரு சிறந்த கமர்ஷியல் படத்தை பார்த்த பீல் வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இது மட்டுமல்லாமல் இயக்குனர் நெல்சனை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அவரின் முந்தைய படமான பீஸ்ட் கலவையான விமர்சனங்களை பெற்றதால், நெல்சன் பல ட்ரோல்களுக்கு ஆளானார். கடுமையான விமர்சனங்களை சந்தித்த நெல்சனின் மீது நம்பிக்கை வைத்து ஜெயிலர் படத்தை இயக்கும் வாய்ப்பை அவருக்கு தந்தார் ரஜினி. அந்த நம்பிக்கையை நெல்சன் காப்பாற்றியுள்ளார் என ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர். மேலும் நெல்சன் எந்தளவிற்கு ட்ரோல்களை சந்தித்தாரோ தற்போது அதே அளவிற்கு பாராட்டை பெற்று வருகின்றார். எனவே ஜெயிலர் படத்தின் மூலம் ரஜினி மட்டுமல்லாமல் நெல்சனும் சிறப்பான கம்பாக் கொடுத்துள்ளதாக ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here