இந்தியாவில் உணவு பொருட்களின் விலைவாசி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் சாமானிய மக்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறார்கள் என்பது முழுமையாக தெரியாத நிலையில்,
இந்திய மக்கள் சாப்பிடும் சராசரி உணவுகளை அடிப்படையாக கொண்டு ஒரு மீல்ஸ் (அல்லது) ஒரு தாலி-யின் விலையை அளவுகோளாக வைத்து கணக்கிடப்பட்டு விரிவாக்கப்பட்டிருகிறாது.
மீல்ஸ்/தாலி என்ற உடன் ஆந்திரா மீல்ஸ் போன்ற ஆடம்பர உணவுகள் என நினைக்க வேண்டாம், ஒரு நாளுக்கு ஒரு வேளைக்கு சாமானிய மக்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான அடிப்படை உணவு அரிசி, கோதுமை, சமையல் எண்ணெய், காய்கறி, எரிவாயு ஆகியவற்றை வைத்து ஒரு தாலி அல்லது ஒரு மீல்ஸ் விலை கணக்கிடப்படுகிறது. இப்படி ஜூலை மாதத்தில், CRISIL அமைப்பு உணவுத் தட்டு விலை ஆய்வின்படி, வீட்டில் தயாரிக்கப்பட்ட சைவத் தாலியின் சராசரி விலை சுமார் 33.7 ரூபாயாகவும், அசைவத் தாலியின் விலை சுமார் 66.8 ரூபாயாகவும் இருந்தது. ஜூலை மாத தரவுகளை ஜூன் மாத தரவுகள் உடன் ஒப்பிடும் போது வெஜ் தாலி விலை 34 சதவீதமும், அசைவ தாலி உணவின் விலை 13 சதவீதமும் அதிகரித்துள்ளன.
இந்த விலை உயர்வுக்கு அடிப்படையான காரணம் தக்காளி, அரிசி விலையில் பதிவான குறிப்பிடத்தக்க அளவிலான உயர்வு தான். தக்காளி விலை உயர்வை மட்டுமே பேசி வந்ததில் பிற காய் கறிகளின் விலை உயர்வை கவனிக்கவில்லை. ஆகஸ்ட் 7 அன்று வெளியிடப்பட்ட CRISIL இன் மாதாந்திர உணவு விலை மதிப்பீட்டின் அடிப்படையில், இந்தியாவில் அடிப்படை சைவ தாலியின் விலை ஜூன் முதல் ஜூலை வரை கணிசமாக 34% உயர்ந்துள்ளது.
இது சாமானிய மக்கள், நடுத்தர மக்களை கடுமையாக பாதித்துள்ளது. ஜூன் மாதத்தில் கிலோவுக்கு ரூ.33 ஆக இருந்த தக்காளியின் விலை, ஜூலை மாதத்தில் கிலோ ரூ.110 ஆக உயர்ந்து,
ஒரே மாதத்தில் 233% உயர்ந்துள்ளது. கூடுதலாக, வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு விலைகள் ஜூன் முதல் ஜூலை வரை முறையே 16% மற்றும் 9% மிதமான உயர்வை பதிவு செய்துள்ளன. மறு முனையில் அசைவ தாலியின் விலை குறைவான உயர்வை மட்டுமே சந்தித்துள்ளது, இதற்கு முக்கியமான காரணம் ப்ராயிலர் விலை 3- 5 சதவீதம் வரையில் சரிந்துள்ளது, சமையல் எண்ணெய் விலை 2 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. இதனால் மாதாந்திர அடிப்படையில் அசைவ தாலியின் விலை கணிசமாகவே உயர்ந்துள்ளது. காய்கறி, அரசி விலை மட்டும் அல்லாமல் ஜூலை மாதம் மிளகாய் விலை 69 சதவீதமும், சிரகம் 16 சதவீதமும் உயர்ந்துள்ளது. இதோடு பிற மசாலா பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.