கோவை மாவட்டம், துடியலூர் அடுத்து உள்ள பன்னிமடை ஊராட்சியில் தங்கள் வார்டுகளுக்கு சரிவர பணிகளை ஒதுக்காத ஊராட்சிச் செயலரை மாற்றக் கோரி உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வெற்றி கண்ட 10 ஊராட்சிக் கவுன்சிலர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம், துடியலூர் அடுத்து உள்ள பன்னிமடை ஊராட்சியில் பன்னிமடை, கஸ்தூரிநாயக்கன்புதூர், தாளியூர், கணுவாய், கே.என்.ஜி.புதூர் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சுமார் 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குடியிருந்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் ரத்தினம் பி.எஸ்.எம் மருதாசலம் தலைவராகவும் மற்றும் துணைத்தலைவர் அருள்குமார் உட்பட 15 ஊராட்சி வார்டு கவுன்சிலர்கள் உள்ளனர்.

ஊராட்சிச் செயலரை மாற்றக் கோரி உள்ளிருப்பு போராட்டம் நடத்திய ஊராட்சிக் கவுன்சிலர்கள்
ஊராட்சி செயலாராக செழியன் என்பவர் உள்ளார். இந்த நிலையில் ஊராட்சியில் பணிபுரியும் ஊராட்சி செயலர் செழியன் தன்னிச்சையாக முடிவு எடுப்பதாகவும், அரசு திட்டங்களை கவுன்சிலர்களுக்கு தெரிவிப்பதில்லை என்றும், இதனால் திட்டங்கள் முறையாக பொதுமக்களுக்கு சென்றடைவதில்லை. தங்கள் வார்டுகளுக்கு பணிகள் எதையும் ஒதுக்குவது இல்லை.
அப்போது அரசால் அறிவிக்கப்பட்டும் நலத்திட்டங்கள் மற்றும் முகாம்கள் குறித்து எந்த வித தகவல்களும் தெரிவிப்பதில்லை என்றும் கூறி ஊராட்சித் துணைத் தலைவர் அருள்குமார் தலைமையில் 8 கவுன்சிலர்கள் இன்று பன்னிமடை ஊராட்சி அலுவலகத்தின் உள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு பெரும் ஏற்பட்டது.

ஊராட்சிச் செயலரை மாற்றக் கோரி உள்ளிருப்பு போராட்டம் நடத்திய ஊராட்சிக் கவுன்சிலர்கள்
இந்த போராட்டத்தில் ஊராட்சித் துணைத் தலைவர் அருள்குமார், சாந்தி சிவராஜன், ராமசந்திரன், கவிதா சிவகுமார், பி.டி. கோபாலசாமி, மாரித்தாய் சுந்தரராஜ், விஜயலட்சுமி பழனிசாமி, ஜெயமணி செல்வராஜ், முருகேசன், வாசுமணி உள்ளிட்ட 10 கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 2 மணி நேரம் போராட்டம் நீடித்தது.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது தகவல் அறிந்து அங்கு வந்த பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஜென்கின்ஸ் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சிக் கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இந்த பேச்சுவார்த்தையில் ஊராட்சி செயலரை மாற்றினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என கவுன்சிலர்கள் கூறினர்.

ஊராட்சிச் செயலரை மாற்றக் கோரி உள்ளிருப்பு போராட்டம் நடத்திய ஊராட்சிக் கவுன்சிலர்கள்
இதை தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் உயர் அதிகாரிகளிடம் பேசினார். பின்னர் உடனடியாக ஊராட்சி செயலரை மாற்றுவதாக கவுன்சிலர்களிடம் உறுதியளித்தார். இதை தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 10 ஊராட்சி கவுன்சிலர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதுகுறித்து துணைத்தலைவர் கூறும் போது, ஊராட்சி செயலரை மாற்றுவதாக கூறியுள்ளனர்.

ஊராட்சிச் செயலரை மாற்றக் கோரி உள்ளிருப்பு போராட்டம் நடத்திய ஊராட்சிக் கவுன்சிலர்கள்
அப்போது மாற்றவில்லை என்றால் மீண்டும் உள்ளிருப்பு போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார். இதனால் ஊராட்சி அலுவலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.