பத்ரகாளி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவில் இஸ்லாமியர்கள் பங்கேற்பு. பத்ரகாளி அம்மன் கோயிலுக்கு ஏராளமான இஸ்லாமியர்கள் சீர்வரிசை எடுத்து வந்து வழங்கி மரியாதை செலுத்தினர்.

பத்ரகாளி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவில் சீர்வரிசை வழங்கி மரியாதை செய்த இஸ்லாமியர்கள்

திண்டுக்கல் மாவட்டம், அடுத்த பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி கிராமத்தில் பழமையான ஹைகோர்ட் எதிரில் பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது. பின்னர் அங்கிருக்கும் கிராம மக்கள் இணைந்து பத்ரகாளியம்மன் கோவிலில் குடமுழுக்கு விழாவிற்கான திருப்பணிகளை கடந்த சில ஆண்டுகளாக சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

சீர்வரிசை வழங்கி மரியாதை செய்த இஸ்லாமியர்கள்

இதனை அடுத்து பத்ரகாளி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா இன்று விமர்சையாக நடைபெற்றது. பத்ரகாளி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு, பத்ரகாளி அம்மனை சாமி தரிசனம் செய்தனர்.

 

இந்த நிலையில் பத்ரகாளி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்ள நெய்க்காரப்பட்டி உள்ள இஸ்லாமியர்களுக்கு கோயில் நிர்வாகிகள் அழைப்பு விடுத்திருந்தனர்.

பத்ரகாளி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவில் சீர்வரிசை வழங்கி மரியாதை செய்த இஸ்லாமியர்கள்

அதனை தொடர்ந்து பத்ரகாளி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா அழைப்பை ஏற்று அந்த பகுதியில் இருக்கும் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் சீர்வரிசை தட்டுகளுடன், பத்ரகாளி அம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக சென்றனர். மேலும் பத்ரகாளி அம்மன் திருப்பணிக்கு நன்கொடையும் வழங்கினார்.

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இஸ்லாமியர்களும், இந்துக்களும்

அப்போது இஸ்லாமியர்களை கோயிலுக்குள் கட்டியணைத்து வரவேற்று சீர்வரிசைகளை கோயில் நிர்வாகிகள் ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

இஸ்லாமியர்கள்

மேலும் இஸ்லாமிய இளைஞர்கள் நடத்தி வரும் காயிதே மில்லத் நற்பணி அமைப்பு சார்பில் கோயிலுக்கு மரத்திலான பீரோவை வாங்கி அன்பளிப்பாக வழங்கினர். மேலும் பத்ரகாளி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் சமூக மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இஸ்லாமியர்களும், இந்துக்களும் இணைந்து உற்சாகமாக கொண்டாடினர்.

இந்துக்கள்

அப்போது ஆண்டுதோறும் பத்ரகாளி அம்மன் கோவிலில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி விழாவிலும் இஸ்லாமியர்கள் தங்களது பங்களிப்பை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here