திமுக குடும்பத்திற்கு எதிராக பேசுபவர்களை கைது செய்வதில் தான் அரசு அக்கறை காட்டுகிறது – வானதி சீனிவாசன்..!

5 Min Read

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாஜக சார்பில் அமைக்கப்பட்டு இருந்த நீர் மோர் பந்தலை சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் திறந்து வைத்தார்.

- Advertisement -
Ad imageAd image

தேர்தல் நடைமுறை காரணமாக கோவை சட்டமன்ற அலுவலகம் பூட்டப்பட்டு இருக்கும் நிலையில், சட்டமன்ற அலுவலகத்தின் வாயிலில் அமர்ந்து பொதுமக்களிடம் வானதி சீனிவாசன் மனுக்களை பெற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் கூறுகையில்;-

பாஜக

இந்தியாவில் அதிகமாக வெயில் பதிவாகும் இடங்களில் ஈரோடு போன்ற இடங்களும் இருப்பது அபாயகரமானது எனவும், தமிழகம் தொழிற்சாலை வளர்ச்சிகளிலும், நகர்புறமயமக்குதல் அதிகமாக இருக்கும் மாநிலங்களில் முதன்மையான மாநிலம் எனவும் தெரிவித்தார்.

வளர்ச்சி, வேலை வாய்ப்பு போன்றவை சுற்றுபுற சூழலோடு இருக்க வேண்டும் எனவும், அப்பொழுது தான் மக்கள் வாழக்கூடிய இடங்களாக அது இருக்கும் என தெரிவித்தார்.

வானதி சீனிவாசன்

மரம், நிலத்தடி நீர் உயர நிறைய அமைப்பினை சேர்ந்தவர்கள் இருக்கின்றனர், அவர்களை சரியாக பயன்படுத்த வேண்டும் எனவும், சிறுதுளி, குளங்கள் பாதுகாப்பு அமைப்பு ஆகியோரை இணைத்து நிலத்தடி நீர் பாதுகாக்க அரசு செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

புவி வெப்பமயமாதாலை தடுக்க சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். குடிநீர் வழங்க சிறப்பு நிதி ஒதுக்கீடு மட்டும் போதாது, பணம் சரியான முறையில் சென்று சேரும் வகையில் செயல்பட வேண்டும் என தெரிவித்தார். மக்கள் போராட துவங்கி இருக்கிறார்கள்.

திமுக

குடிநீர் தட்டுப்பாடு இருக்கும் பகுதிகளில் தண்ணீர் வழங்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டியது கடமை எனவும் தெரிவித்தார். அடித்தட்டு மக்களுக்கு பிரச்சனை இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார். சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்கப்படாமல் இருப்பதால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

தேர்தல் அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கைகள் இல்லை. தேர்தல் முடிந்தும் சட்டமன்ற அலுவலகங்கள் திறக்கப்படாததால் மாணவர் சேர்க்கைக்கு பரிந்துரைக்கு வரும் பெற்றோர் சிரமத்திற்கு உள்ளாகின்றார் என தெரிவித்தார்.

வானதி சீனிவாசன்

சட்டமன்ற உறுப்பினர் அலுவலகங்களை திறக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும், தேர்தல் முடிந்த மாநிலங்களில் எம்.எல்.ஏ அலுவலகம் செயல்பட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும், மத்திய தேர்தல் ஆணையத்திடம் இதை வலியுறுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

திமுக அரசு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு, குடிநீர் பிரச்சனை ஆகியவற்றை கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை எனவும், திமுக குடும்பத்திற்கு எதிராக டிவிட்டர், சமூக வலைதளங்களில் பேசுபவர்களை கைது செய்வதில் அக்கறை காட்டுகிறது, மக்கள் பிரச்சினையில் அரசு தீவிரமாக இல்லை எனவும் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு

பத்தி சேசாத்ரி, மாரிதாஸ் என தொடர்ச்சியாக பல்வேறு நபர்களை கைது செய்தது. அதன் தொடர்ச்சியாக சவுக்கு சங்கரையும் கைது செய்துள்ளது எனவும், சவுக்கு சங்கர் எங்களை பணணாத விமர்சனம் இல்லை. நான் திமுகவிற்கு போக போகின்றேன் என்று கூட சொன்னார்.

இவற்றை சகித்துக் கொள்ள முடியாமல் அரசு அதிகாரத்தை துஷ்பிரயோபம் செய்கின்றது. இது ஜனநாயகத்திற்கு விரோதமானது என தெரிவித்தார். தண்ணீர் பிரச்சினையை தீர்க்க முடியவில்லை, போதை கலாச்சாரம் இருக்கின்றது. இதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்

மக்களவை தேர்தலின் பொழுது பல்வேறு இடங்களில் எதிர்ப்பு இருப்பதை திமுக தெரிந்திருக்கும். ஆனால் அதைபற்றி கவலை படாமல் வழக்கு போட்டு கொண்டு இருக்கின்றது. கஞ்சா வழக்கு என்னும் பழைய நடைமுறையை திமுக இன்னும் தூக்கி கொண்டு இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.

சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா? இல்லையா? இதில் என்ன உண்மை என தெரியாது, ஆனால் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட போது, மாநில அரசின் மீது சந்தேகம் வந்துள்ளது என தெரிவித்தார். சவுக்கு சங்கர் தாக்கப்பட்டது உண்மை என்றால் இந்த அரசு கேவலமான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறது என அர்த்தம் என கூறினார்.

பாஜக அரசு

பெண்களை இழிவுபடுத்தி விட்டதாக கைது செய்யப்பட வேண்டும் என்றால் திமுகவினர் பாதி பேர் கைது செய்யப்பட்டு இருக்க வேண்டும் என தெரிவித்தார். பெண் காவலர்களை இழிவுபடுத்தி விட்டதாக பொங்குகின்ற அரசு, திமுகவினர் எவ்வளவு பெண்களை கேவலமாக பேசி இருக்கின்றனர் என்பதை பார்க்க வேண்டும்.

எங்கள் மீது மோசமான விமர்சனம் வைத்தவர் தான் சவுக்கு சங்கர், அதிகாரம் இருக்கிறது என்பதற்காக கஞ்சா வழக்கு போடுவது என்பது தவறானது என தெரவித்தார். கோவையில் தெரு நாய்களை கட்டுப்படுத்துவது குறித்து சட்டமன்றத்தில் பேசியிருக்கிறேன்.

எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்

தெரு நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்வதில் வழங்கக்கூடிய பணம் போதுமானதாக இல்லை, கூடுதல் பணம் ஒதுக்க வேண்டும் எனவும், நாய்களுக்கு பத்திரமாக குடும்பகட்டுப்பாடு ஆபரேஷன் செய்து அவற்றை பாதுகாக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

50 முதல் 60% வாக்குப்பதிவு நடைபெற்ற இடங்களை தேர்தல் ஆணையம் கவனிக்க வேண்டும். இந்த பிரச்சனை அதிகம் இருக்கிறது எனவும் தெரிவித்தார். அடுத்த தேர்தலுக்குள் இந்த பிரச்சனைகளை தேர்தல் ஆணையம் சரி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

திமுக அரசு

பொள்ளாச்சி பகுதியில் தென்னை மரங்களை பாதுகாக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என தெரிவித்தார். பிரஜ்வல் ரேவண்ணா விஷயத்தில் கர்நாடக மகளிர் அணி எதிர்ப்பை தெரிவித்திருக்கிறது.

தேசிய மகளிர் அணி சார்பில் டெல்லியில் இருந்து நானும் கொடுத்திருக்கிறேன், யார் தவறு செய்திருந்தாலும் யார் குற்றம் செய்திருந்தாலும் அதற்கான தண்டனை உறுதி செய்யப்பட வேண்டும். ரேவண்ணா விவகாரத்தில் பாஜக தலையிடாது எனவும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

வானதி சீனிவாசன்

முதல்வர் ஓய்வுக்கு சென்றாலும் தமிழக அரசு ஓய்வில்லாமல் உழைக்க வேண்டும் என்பது தான் எங்களது எதிர்பார்ப்பு எனவும் வானதி சீனிவாசன் பேட்டியளித்தார். தமிழகத்தில் அனைத்து விதமான பொருட்களும் விலை ஏறிவிட்டது டாஸ்மாக் கடையில் கூட விலை ஏறிவிட்டது எனவும் தெரிவித்தார்.

அப்பொழுது வானதி சீனிவாசனிடம் சட்டமன்ற அலுவலகத்தின் வாசலிலும், அலுவலக வளாகத்திலும் காலி மது பாட்டில்கள் கிடப்பது குறித்த கேள்விக்கு, அதிர்ச்சி அடைந்தவர் சட்டமன்ற உறுப்பினர்,

வானதி சீனிவாசன்

அலுவலகத்தை திறக்காமல் விட்டால் என்னவெல்லாம் நடக்கிறது என பாருங்கள் எனவும் இன்னும் கொஞ்ச நாளில், கஞ்சா விற்கிறது என்று சொன்னாலும் சொல்வார்கள் என தெரிவித்தார்.

Share This Article
Leave a review