கேரளா, கர்நாடகா உட்பட 13 மாநிலங்களை சேர்ந்த 89 தொகுதிகளில் நாளை, மறுநாள் மக்களவை தேர்தலின் 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்வு பெற்றது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது. அதில், முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த, 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

மக்களவை தேர்தல்

தமிழ்நாட்டில் 69.72% வாக்குகள் பதிவாகின. இந்த நிலையில், நாளை, மறுநாள் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 89 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 13 மாநிலங்களைச் சேர்ந்த 89 தொகுதிகளில் இரண்டாம் கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டைப் போலவே கேரளாவிலும் 20 தொகுதிகளுக்கும் நாளை, மறுநாள் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நாளை, மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறும் மாநிலங்கள்:

ஓய்ந்தது 89 தொகுதிகளில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரச்சாரம்

கேரளா – 20 தொகுதிகள்
கர்நாடகா – 14 தொகுதிகள்,
ராஜஸ்தான் – 13 தொகுதிகள்
உத்தரப்பிரதேசம் – 8 தொகுதிகள்

மகாராஷ்ட்ரா – 8 தொகுதிகள்
மத்தியப் பிரதேசம் – 7 தொகுதிகள்
அசாம் – 5 தொகுதிகள்
பீகார் – 5 தொகுதிகள்
சத்தீஸ்கர் – 3 தொகுதிகள்

ஓய்ந்தது 89 தொகுதிகளில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரச்சாரம்

மேற்கு வங்கம் – 3 தொகுதிகள்
மணிப்பூர் – 1 தொகுதி
திரிபுரா – 1 தொகுதி
ஜம்மு, காஷ்மீர் – 1 தொகுதி

இரண்டாம் கட்ட தேர்தலுக்காக பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

ஓய்ந்தது 89 தொகுதிகளில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரச்சாரம்

மாலை 5 மணிக்கு மேல் வெளிநபர்கள் தொகுதியில் தங்க அனுமதி அளிக்கப்படாது. வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் தயார் செய்துள்ளது. வாக்குப்பதிவு நடைபெறும் மாநிலங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here