பாலியல் வழக்கில் கைதான தமிழ் ஆசிரியர் சஸ்பெண்ட்..!

2 Min Read
30-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் தொல்லை

விழுப்புரம் மாவட்டத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தொடர்பாக கைதான அரசுப்பள்ளி தமிழ் ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

- Advertisement -
Ad imageAd image

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே திருவக்கரை கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தமிழ் ஆசிரியராக விழுப்புரம் அருகே வாக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 38) என்பவர் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த சில மாதங்களாக பள்ளி மற்றும் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க மாணவிகளை அழைத்துச் சென்று அவர்களுக்கு பாலியல் ரீதியாக பல செயல்களில் ஈடுபட்டுள்ளார். அத்தோடு மாணவிகளிடம் செல்போனில் ஆபாச படம் காண்பித்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது தொடர்பாக மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் ஆசிரியரின் செயல்பாடுகள் குறித்து தெரிவித்துள்ளனர்.

30-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் தொல்லை

மேலும் அரசு நிகழ்ச்சிகளுக்காக வெளியூருக்கு அழைத்துச் செல்வதாக கூறி, மாணவிகளை தங்கும் விடுதிகளில் அறை எடுத்து தங்க வைத்தும், பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் தமிழ் ஆசிரியர் மகேஸ்வரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கோட்டகுப்பம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆசிரியர் சிறையிலடைக்கப்பட்டார். இவ்வாறாக அவர் 30-க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிப்பதால், அது தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பல மாணவிகளிடம் தனித்தனியே விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போக்சோ சட்டத்தின் கீழ் கோட்டகுப்பம் அனைத்து மகளிர் போலீசார் கைது

இந்த நிலையில் போக்சோ சட்டத்தின் கைதான தமிழ் ஆசிரியர் மகேஸ்வரன் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, அவரை பணியிடம் நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து, நேற்று விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவழகன் உத்தரவிட்டுள்ளார். இதற்கான ஆணை சிறையில் உள்ள தமிழ் ஆசிரியர் மகேஸ்வரனுக்கு தெரிவிக்கப்பட்டது.

பள்ளி ஆசிரியரே மாணவிகளிடம் இப்படி தவறா நடந்து கொண்ட சம்பவம் பொது மக்களிடையே முகம் சுளிப்பை ஏற்படுத்தி வருகிறது. இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க ஆசிரியர்,மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக வகுப்புகள் நடத்தி, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். மாணவர்கள் ஆசிரியர்கள் இடையே ஏற்பட்டுள்ள இடைவெளி தான் இது போன்ற சம்பவங்களுக்கு காரணாமாகின்றது. பள்ளிகல்வித் துறை கவனிக்குமா.?

Share This Article
Leave a review