முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது – உச்சநீதிமன்றம்..!

3 Min Read

பண மோசடி வழக்கில் ஜாமின் கோரிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராகவும், பிணை வழங்க கோரியும் செந்தில் பாலாஜி வழக்கு தொடுத்து இருந்தார்.

- Advertisement -
Ad imageAd image

செந்தில் பாலாஜி தொடுத்த மனு மீதான விசாரணையை இன்று விசாரிப்பதாக கடந்த 6 ஆம் தேதி ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.

செந்தில் பாலாஜி

கடந்த 2 முறை வழக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் கடந்த 6 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த போது அமலாக்கத்துறை சார்பில் வழக்கை ஒத்திவைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இதற்கு வழக்கை ஒத்திவைக்ககூடாது. அதற்கு அனுமதிக்கவே கூடாது என்று செந்தில் பாலாஜி தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது.

பின்பு வழக்கை ஒத்திவைத்த நீதிபதிகள் மே 15 ஆம் தேதி விசாரணை செய்யப்படும் என்று கூறினர். மேலும் மே 15 ஆம் தேதி அதாவது இன்று நிச்சயம் விசாரணை நடைபெறும் என உறுதி அளித்துள்ளனர். ஆனால் இன்றும் விசாரணை நடக்கவில்லை.

செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது

மாறாக பண மோசடி வழக்கில் ஜாமின் கோரிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

கடந்த மாதம் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு மற்றும் விசாரணை ரத்து வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு பதில் அளிக்க கூறி உத்தரவிட்டது. அதோடு வழக்கை ஒத்திவைத்தது.

செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி தொடர்ந்த ஜாமீன் மனு கடந்த மாதம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை வேண்டும் என்றே வழக்கை தாமதப்படுத்துகிறது என்று செந்தில் பாலாஜி தரப்பு வாதிட்டது.

இன்று வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்ததால் செந்தில் பாலாஜி இப்படி குறிப்பிட்டார்.

அமலாக்கத்துறை

அதில் அமலாக்கத்துறை தனது பதில் மனுவை தாமதமாக தாக்கல் செய்தது. அமலாகக்துறை தாக்கல் செய்த பதில் மனுவில், செந்தில் பாலாஜி ஜாமின் கோரி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை பதில் மனுவில் கூறியிருப்பதாவது;-

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகும், எம்எல்ஏ பொறுப்பில் உள்ளதால் influential person-ஆக உள்ளார். வழக்கு தொடர்புடைய சாட்சியங்களை அழிக்க வாய்ப்புள்ளதால் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கக்கூடாது.

செந்தில் பாலாஜி

விசாரணையின் போது செந்தில்பாலாஜி உரிய ஒத்துழைப்பை வழங்கவில்லை என்று கூறியது. இதற்கு செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த பதிலில்;-

320 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கிறேன். ஆனால் வேண்டுமென்றே இந்த வழக்கில் தாமதம் செய்ய வேண்டும் என்பதற்காக கடைசி நேரத்தில் பதில் மனுவை அமலாக்கத்துறை தாக்கல் செய்திருக்கிறது என்று செந்தில் பாலாஜி இதற்கு பதில் அளித்தார். இதை அடுத்து அமலாக்கத்துறை அளித்த பதிலில்;-

செந்தில் பாலாஜி மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது – உச்சநீதிமன்றம்

நாங்கள் இந்த வழக்கில் தாமதமாக பதில் அளித்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். வேண்டும் என்றே நாங்கள் தாமதம் செய்யவில்லை என்று அமலாக்கத்துறை கூறியது.

அதை தொடர்ந்து மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் விசாரணையை மே 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. மே 18 ஆம் தேதியிலிருந்து ஜூலை 7 ஆம் தேதி வரை உச்சநீதிமன்றத்தில் கோடை விடுமுறை விடப்படும்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது – உச்சநீதிமன்றம்

இதனால் மே 15 ஆம் தேதி நிவாரணம் கிடைக்க வேண்டும். அப்போது பெயில் கிடைக்கவில்லை என்றால் பிறகு ஒன்றரை மாதம் செந்தில் பாலாஜி சிறையில் இருக்க வேண்டி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article

Leave a Reply