ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாடுக்கான சிறப்புச் சட்டத்தை கொண்டு வந்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.
தமிழகத்தில் பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கான சிறப்பு உட்கூறு மற்றும் துணை திட்டத்திற்காக (SCP & TSP) “ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான தமிழ்நாடு மேம்பாடு செயல் திட்டம் 2024” சட்டம் இன்று சட்ட மன்றத்தில் நிறைவேறியது.

இந்த சட்டம் உருவாக தொடக்கம் முதல் தீவிரமாக செயல்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சட்ட மன்றக் குழு தலைவர் திரு சிந்தனைச்செல்வன் அவர்கள் சட்டமன்றத்தில் வரவேற்றுப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவர் திரு. சிந்தனைச்செல்வன் உள்ளிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் 4 பேருடன் சேர்ந்தனர்.

தமிழ்நாடு SCP/TSP சட்டத்திற்கான கூட்டமைப்பு அமைப்பாளரும், இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம் செயல் இயக்குநர் திரு. வே.அ.இரமேஷ்நாதன் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (22.2.2024) தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்தார்.
தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டிற்கான நிதி செலவிடப்படுவதை உறுதி செய்வதற்கும், அவர்களுக்கான மேம்பாட்டுச் செயல் திட்டத்தினைச் செயல்படுத்துவதற்கும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் சட்டம் இயற்றியதற்காக நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

இந்த சட்டம் தலித் பழங்குடியின மக்கள் சமூக பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காக கொண்டுவரப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள தலித், பழங்குடியின மக்கள் தொகைக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு செய்து, மேம்பாட்டிற்கான சிறப்புத் திட்டங்களை உருவாக்கப்படும்.
திட்டங்களை உருவாக்கவும், சரியான வகையில் முழுமையாக செயல்படுத்தவும் மாநில மற்றும் மாவட்ட அளவில் முதல்வர் உள்ளிட்டோரைக் கொண்ட அமைப்புகள் உருவாக்கப்படும்.

ஒதுக்கப்படும் நிதி முழுமையாக அந்த ஆண்டே தலித், பழங்குடியினர் நலனுக்காக பயன்படுத்தப்படும் என்பது இச்சட்டத்தின் முக்கிய அம்சமாகும். தமிழக அரசு விரைவில் இந்த சட்டத்திற்கான விதிகள் உருவாக்கபடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.