கன்னியாகுமரி மாவட்டம், அடுத்த சங்கத்துறை பீச் சாலையில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் சிறுவன் பலியான நிலையில், மோட்டார் சைக்கிளை கார் இழுத்து செல்லும் வீடியோ வெளியாகி காண்போரை கண் கலங்க செய்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், அடுத்த ஈத்தாமொழி அருகே உள்ள தெற்குபால் கிணற்றான் விளையை சேர்ந்தவர் கோபி வயது 39. இவர் கன்னியாகுமரி பகுதியில் பெயிண்ட் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று மது போதையில் மனைவி லேகா மற்றும் குழந்தைகளுடன் தங்களது காரில் சங்கத்துறை கடற்கரைக்கு காரை கோபி ஓட்டி வந்துள்ளார்.

இந்த நிலையில் கார் கடற்கரை பகுதிக்கு வேகமாக வந்த போது, காரின் முன்னால், தெற்கு சுரங்குடி பள்ளி தெருவை சேர்ந்த அஜாஸ் வயது 15 என்ற பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுவன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரை வேகமாக ஓட்டி வந்த கோபி, சிறுவன் அஜாஸ் ஓட்டிய மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியுள்ளார்.

இந்த விபத்தில் கார் ஓட்டுநர் கோபி வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக சென்றுள்ளார். ஆனால் காரின் முன் பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் சிறுவன் அஜாஸ் சிக்கிக் கொண்டிருந்துள்ளார். மேலும் கார் வேகமாக வந்து சங்கத்துறை கடற்கரை முன்பு நின்று உள்ளது. அப்போது காரின் முன் பகுதி மளமள வென தீ பிடித்துள்ளது.

அப்போது உடனே கோபி மற்றும் அவரது மனைவி குழந்தைகள் உயிரை காப்பாற்றிக்கொள்ள காரில் இருந்து தப்பித்து ஓடினர். இதற்கு இடையே கார் முழுமையாக தீப்பற்றி எரிந்தது. அப்போது பைக்கில் வந்து விபத்துக்குள்ளான 15 வயது சிறுவன் அஜாய் காரின் முன் பகுதியில் சிக்கி சம்பவ இடத்தில் உயிரிழந்து உள்ளார்.

மேலும் காரில் தீ பிடித்ததில் சிறுவன் அஜாயும் கரிக்கட்டையாக தீயில் எரிந்தான். அப்போது கடற்கரை பகுதிகளில் நின்ற இளைஞர்கள் பொதுமக்கள் தங்களது செல்போனில் படம் எடுத்துள்ளனர் .பின்னர் கார், மோட்டார் சைக்கிளில் மோதி தரவென இழுத்துச் சென்றுள்ளது.

இதனை பின் தொடர்ந்து காரை நிறுத்துமாறு வாகனத்தில் வந்தவர்கள் எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளவில் வைரலாகி காண்போறின் நெஞ்சை பதர செய்துள்ளது.