தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பொறுப்பேற்கிறார் செல்வப்பெருந்தகை!

1 Min Read
செல்வப்பெருந்தகை

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. நாளை பொறுப்பேற்கிறார்.

- Advertisement -
Ad imageAd image

இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் டாக்டர் அஜோய்குமார், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் டாக்டர் சிரிவெல்ல பிரசாத் ஆகியோர் முன்னிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பு வகித்த கே.எஸ். அழகிரி அவர்களிடமிருந்து புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ., 21.2.2024 புதன்கிழமை மாலை 3.30 மணிக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் தலைவர் பொறுப்பினை ஏற்றுக் கொள்வார்.

இந்நிகழ்வில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ்குமார், எம்.எல்.ஏ., முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம், எம்.பி., டாக்டர் ஏ. செல்லக்குமார், எம்.பி.,பி. மாணிக்கம் தாகூர், எம்.பி., தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் கே.வீ. தங்கபாலு, ஈ.வெ.கி.ச. இளங்கோவன், எம்.எல்.ஏ., சு. திருநாவுக்கரசர், எம்.பி., குமரி அனந்தன், திரு. எம். கிருஷ்ணசாமி ஆகியோர் பங்கேற்பார்கள்.

எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை

அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள், நிர்வாகப் பெருமக்கள், இயக்க நண்பர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்வார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது

Share This Article
Leave a review