புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரில் 5 ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிறுமி பாலியல் பலாத்காரம் செய்த அதேபகுதியை சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது வாலிபர் மற்றும் விவேகானந்தன் வயது (57) என்ற முதியவரும் கூட்டு சேர்ந்து சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போது உயிரிழந்தார்.

இதனிடையே நேற்று சிறுமியின் உடல் அந்த பகுதியில் உள்ள கால்வாயில் சாக்கு மூட்டையில் வீசினர். பின்னர் போலீசார் குற்றவாளிகளான விவேகானந்தன் மற்றும் கருணாஸ் ஆகிய இருவரும் கைது செய்தனர். அப்போது கைதான விவேகானந்தன் சிறையில் தற்கொலை முயற்சி சம்பவம் குறித்து காணலாம்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அதேபகுதியை சேர்ந்த முதியவர் விவேகானந்தன் வயது (59), கருணாஸ் வயது (19) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

தற்போது 15 நாட்கள் நீதிமன்ற காவலில் 2 பேரும் காலாப்பட்டு மத்திய சிறையில் தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அதில் முதியவர் விவேகானந்தன், மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளதால், அடிக்கடி வாய் விட்டு கத்துவது, இங்கும், அங்குமாக ஓடுவது என சைக்கோ போல் செயல்பட்டு சிறைக்காவலர்களுக்கு பெரும் தொல்லை கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.

கடந்த 2 நாட்களாக முதியவர் விவேகானந்தன், குளிக்கும் சோப்பை விழுங்குவது, வாய் மற்றும் மூக்கை மூடிக்கொண்டு மூச்சை நிறுத்தி சாக முயற்சிப்பது, சட்டையால் தனது கழுத்தை தானே இறுக்கி தற்கொலைக்கு முயல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்.
இதனை பார்த்த காவலர்கள் விவேகானந்தனை தடுத்துள்ளனர். மேலும், அவர் தொடர்ந்து, தூங்காமல் முணகி கொண்டே இருப்பது, தான் உடனே சாக வேண்டும் என திரும்ப, திரும்ப கூறி வருகிறார்.

எனவே இருவரும் அடைக்கப்பட்டுள்ள சிறைக்கு அருகிலேயே காவலர்கள் 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுபோன்ற சூழலில், இருவரையும் இன்று காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஆனால் சிறையில் எந்த விதமான தற்கொலை முயற்சியும் நடைபெறவில்லை என்று சிறைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.