Ponneri : வைத்தியநாத சுவாமி கோவிலில் திருக்கல்யாண வைபோகம் – பக்தர்கள் உற்சாகம்..!

1 Min Read

பொன்னேரி அருகே வைத்தியநாத சுவாமி கோவிலில் திருக்கல்யாண வைபோகம் விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

- Advertisement -
Ad imageAd image

திருவள்ளூர் மாவட்டம், அடுத்த பொன்னேரி அருகே வேண்பாக்கத்தில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

வைத்தியநாத சுவாமி கோவில்

அதை தொடர்ந்து சிவபெருமான் பார்வதி திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னாதாக பக்தர்கள் சார்பில் பெருமாள் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க 21 வகையிலான சீர்வரிசை கொண்டு வரப்பட்டது. இதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் அக்னி ஹோமம் வளர்த்து வேத மந்திரங்கள் ஓதினர்.

அதை தொடர்ந்து சிவபெருமானுக்கும், பார்வதி தாயாருக்கும் மாலை மாற்றுதல் நிகழ்வு நடைபெற்றது. இதை அடுத்து கெட்டி மேளம் முழங்க சிவாச்சாரியார்கள் பார்வதி தேவிக்கு மங்கள நாண் சூட்டி திருக்கல்யாண வைபவத்தை வெகு விமரிசையாக நடத்தினர்.

திரளான பக்தர்கள்

இந்த நிகழ்வின் போது பக்தர்கள் ஓம் நமச்சிவாய, ஓம் நமச்சிவாய என பக்தி பரவசத்தில் முழக்கமிட்டனர். திருக்கல்யாண வைபோகத்திற்கு பிறகு மாப்பிள்ளை சிவபெருமானுக்கும், மணப்பெண் பார்வதி தாயாருக்கும் சிவாச்சாரியார்கள் மஹா தீபாராதனை செய்து,

பக்தர்களுக்கு திருக்கல்யாண தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். இந்த விழாவில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சிவபெருமான் திருக்கல்யாண வைபோகத்தை கண்டு களித்தனர்.

Share This Article
Leave a review