சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி பொன்முடி ஆகியோர் குற்றவாளி என்று சென்னை உயர் நீதி மன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது .
இந்த வழக்கின் தீர்ப்பை இன்று வழங்கிய நீதிபதி ஜெயச்சந்திரன் அவர்களுக்கு 3 ஆண்டு சிறை மற்றும் 50 லட்சம் ரூபாய் அபராதமாக செலுத்த வேண்டும் என்ற அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளார் .
இந்த தீர்ப்பினை அடுத்து பொன்முடி தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியினை ராஜினாமா செய்ய வேண்டிய நெருக்கடியில் உள்ளார் . மேலும் அவர் சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்ற , திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளது என்று அறிவித்து விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாகவும் , அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது
எனினும் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த தீர்ப்பினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையிடு செய்ய பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி பொன்முடிக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கபட்டுள்ளது .
பொன்முடி மற்றும் அவரது மனைவியின் விடுதலையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்தது .
திமுக கட்சியின் துணை பொதுச்செயலாளர் மற்றும் உயர் கல்வி துறை அமைச்சரான பொன்முடி கடந்த 1996-2001 திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்தார் .
அவர் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த அந்த கால கட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.36 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக அவர் மீதும், அவருடைய மனைவி விசாலாட்சி பொன்முடி உள்ளிட்ட குடும்பத்தினர் மீதும் 2011ல் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் இந்த வழக்கு வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு , விசாரணை நடைபெற்று வந்தது .
இந்த நிலையில் இந்த வழக்கில் குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டப்பட்ட பொன்முடி உள்ளிட்டோரை நிரபராதிகள் என்று வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் தீர்ப்பளித்தது.

வேலூர் நீதிமன்ற இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் விதமாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து இந்த வழக்கினை மறு ஆய்வு விசாரணைக்கு எடுத்தார் . மேலும் பொன்முடி உள்ளிட்ட இந்த வழக்கில் தொடர்பு உடையவர்களையும் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளும் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டிருந்தார்
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தற்போது வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டதால் அவருக்கு பதிலாக நீதிபதி ஜெயச்சந்திரன் இந்த வழக்கை விசாரித்து வந்தார் .
இந்நிலையில் தண்டனை விவரங்கள் வெளியாக உள்ள நிலையில் நீதிபதி முன் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகியோர் ஆஜராகினர். அப்போது வயதையும், மருத்துவக் காரணங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் பொன்முடி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால், அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை அடுத்து அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டணையும், இருவருக்கும் தலா ரூ. 50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 30 நாட்கள் சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாகவும், அதற்குள் மேல்முறையீடு செய்துகொள்ளலாம் எனவும் நீதிபதி ஜெயச்சந்திரன் உத்திரவு பிறப்பித்துள்ளார்.
பொன்முடியின் தண்டனை இன்று உறுதி செய்யப்பட்ட நிலையில் , இதனை சட்ட ரீதியாக நாங்கள் எதிர் கொள்வோம் என்று திமுக கட்சி தலைமை தெரிவித்துள்ளது .
எனினும் பொன்முடியின் தண்டனை ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் , இதனை தாங்கள் வரவேற்பதாக பா ஜ க கட்சியின் மாநில தலைவர் க அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார் .