கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் பொங்கல் கொண்டாட்டம் – காவலர்களுடன் சினிமா பாட்டுக்கு நடனமாடி வைஃப் செய்த டி.எஸ்.பி..!

2 Min Read

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தில் டி.எஸ்.பி சக காவலர்களுடன் இணைந்து சினிமா பாட்டுக்கு நடனமாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

- Advertisement -
Ad imageAd image

தமிழர்கள் பல விழாக்களைக் கொண்டாடினாலும், தை முதல் நாளன்று கொண்டாடப்படும் தைப் பொங்கல் தான், தமிழர்களின் தனிப்பெரும் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இது தமிழர்களின் பாரம்பரிய, பண்பாட்டு விழாவாகும். தமிழர்கள், நன்றி செலுத்துவதில் தன்னிகரற்றவர்கள். உழைப்பாளிகளாகிய அவர்கள் இயற்கைக்கும், பிற உயிர்களுக்கும் நன்றி செலுத்துவதற்காக வெகு விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர்.

வைஃப் காவலர்கள்

தமிழர்கள், தோன்றிய காலம் முதல், இயற்கையை வழிபட்டு, வணங்கி தாங்கள் வாழ்வதற்கு வளங்களைக் கொடுப்பதால் மகிழ்ச்சியுடன் தைப் பொங்கலைக் கொண்டாடுகின்றனர். சங்க காலத்திலேயே, பொங்கல் நோன்பு இருந்ததற்கும் ஆதாரங்கள் இருக்கின்றன. சங்க காலத்தில், விவசாயமே, மக்களின் தொழிலாக இருந்தது. மண்ணை நம்பியே மக்களுக்கு மும்மாரி மழை தேவை. மழை பெய்தால், பயிர் செழிக்கும். நாடு கொழிக்கும்.

வைஃப் காவலர்கள்

தமிழர்களின் தைப்பொங்கல் திருநாளன்று புத்தாடை அணிந்து தங்களது வீடுகளின் முன் புதுப்பானையில் புத்தரிசியிட்டு பொங்கல் பொங்கி வரும் போது பொங்கலோ பொங்கல் என குலவையிட்டு சப்தமிட்டு கொண்டாடுவது தமிழர்களின் பாரம்பரியம். தமிழர் திருநாளான தைப்பொங்கலையொட்டி கோவை புறநகர காவல் நிலையங்களில் பொங்கல் விழா விமர்சனையாக கொண்டாடப்பட்டது.

காவலர்களுடன் சினிமா பாட்டுக்கு நடனமாடி வைஃப் செய்த டி.எஸ்.பி

அந்த வகையில் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் டி.எஸ்.பி தங்கராமன் குடும்பத்துடன் கலந்து கொண்டு பொங்கல் விழாவை கொண்டாடினார். யூனிஃபார்ம்முக்கு லீவு விட்ட காவலர்கள் பாரம்பரிய முறைப்படி வேஷ்டி சட்டை, புடவை என புத்தாடை அணிந்து, புதுப்பானையில் பச்சரிசி பொங்கலிட்டு மகிழ்ந்தனர்.

காவலர்களுடன் சினிமா பாட்டுக்கு நடனமாடி வைஃப் செய்த டி.எஸ்.பி

பொங்கல் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஓய்வின்றி பணிபுரியும் மன அழுத்தத்தை போக்கும் வகையில் மியூசிக் சேர், கயிறு இழுத்தல், உறியடித்தல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதனை தொடர்ந்து சினிமா பாடல்களுக்கு வைஃப்பான காவலர்கள் போட்டனர். அப்போது டி.எஸ்.பி தங்கராமன் சக காவலர்களுடன் இணைந்து நடனமாடியது அங்கிருந்த காவலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதேபோல சூலூர் காவல் நிலையத்திலும் காவலர்கள் புத்தாடை அணிந்து பொங்கல் வைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தில் டி.எஸ்.பி சக காவலர்களுடன் இணைந்து சினிமா பாட்டுக்கு நடனமாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Share This Article
Leave a review