திருக்கோவிலூர் அருகே வள்ளலார் மடம் நடத்தி வந்த மூதாட்டி திடீரென உயிரிழந்தார். மூதாட்டி காசியம்மாள் என்பவரை புதைக்கப்பட்ட இடத்தில் அவரது உடலை தாசில்தார் முன்னிலையில் மீண்டும் தோண்டி எடுத்து மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். திருக்கோவிலூர் அடுத்த வீரபாண்டி கிராமத்தில் வசித்து வந்தவர் மூதாட்டி காசியம்மாள் வயது 85. இவர் அந்த பகுதியில் அருட்பெருஞ்ஜோதி திருவருட்பிரகாச ராமலிங்க அடிகளாரின் வள்ளலார் மடம் நடத்தி வருகிறார். இந்த மடத்தில் அதேபகுதியை சேர்ந்த முருகன் அறிவழகன் ஆகியோர் மடத்தில் நீண்ட நாட்களாக பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக மூதாட்டி காசியம்மள் உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் உடல்நிலை சீராகவில்லை. இந்த நிலையில் காசியம்மாள் கடந்த 1 ஆம் தேதி உடல் நலக்கோளாறு காரனமாக இறந்தார்.

இதனை அடுத்து மடத்தில் வசிக்கும் முருகன் அறிவழகன் ஆகியோர் உயிரிழந்த அன்று மாலை அதே பகுதியில் காசியம்மாள் உடலை அடக்கம் செய்தனர். ஆனால் இதுகுறித்து அதேபகுதியில் வசிக்கும் அவரது மகன் செந்தில்குமார் தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த காசியம்மாள் மகன் செந்தில்குமார் தனது தாய் சாவில் சந்தேகம் இருப்பதாக அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். செந்தில்குமார் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலிசார் விசாரணையில் சந்தேகம் இருப்பதால் காசியம்மாளின் உடலை தோண்டி எடுத்து உடல்கூறு ஆய்வு செய்ய திட்டமிட்டனர். இதையடுத்து கண்டாச்சிபுரம் தாசில்தார் கற்பகம் முன்னிலையில் காசியம்மாள் உடலை தோண்டி எடுத்து அரசு மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். காசியம்மாள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தெரியவரும். இதுவரை காசியம்மாள் இறப்பிற்க்கு காரணம் தெரியவில்லை.

பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் தான் காசியம்மாளின் உயிரிழப்பிற்க்கு காரணம் தெரியும். அதுவரை காசியம்மாளின் உயிரிழப்பு சந்தேக மரணமாகவே பதிவு செய்யப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். செந்தில்குமார் ஏன்? காசியம்மாள் உயிருடன் இருக்கும் போது அவருடன் இருக்கவில்லை? அவர்களுக்குள் ஏதாவது குடும்ப பிரச்சனையா? என்கிற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.