புதுச்சேரியில் கழிவறையில் இருந்து விஷவாயு தாக்குதல் – 3 பேர் பரிதாப பலி..!

2 Min Read

புதுச்சேரி மாநிலம், புதுநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் உள்ள கழிவறையில் இருந்து விஷவாயு தாக்கியதில் மூதாட்டி ஒருவர் மயங்கி விழுந்துள்ளார். இதனைக்கண்ட அவரது மகளும் அவரை தூக்க சென்ற போது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

- Advertisement -
Ad imageAd image

இதேபோல் அருகில் இருந்த ஒரு தெருவிலும் உள்ள 15 வயது சிறுமியும் வீட்டிற்குள் செல்ல முயன்ற போது விஷவாயு தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பாதாள சாக்கடையில் விசவாயு

மேலும் உயிரிழந்தவர்களின் உடல்களையும் கைப்பற்றி, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் உடனடியாக அந்த பகுதியில் உள்ள அனைவரையும் மீட்டு வெளியேற்றி உள்ளனர். இது தொடர்பாக மக்கள் கூறுகையில், அருகில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் இருக்கிறது.

மேலும் பாதாள சாக்கடை நிரம்பி வழிந்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதன் காரணமாகவே விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள்.

புதுச்சேரியில் கழிவறையில் இருந்து விஷவாயு தாக்குதல் – 3 பேர் பரிதாப பலி

இனியாவது இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறினர். இந்த நிலையில் இது தொடர்பாக காவல் கண்காணிப்பாளர் கூறியதாவது:-

முதற்கட்டமாக தீயணைப்பு துறை மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு இந்த இடத்தில் இருந்து அனைத்து மக்களையும் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதுமட்டுமல்லாமல் தொடர்ந்து வாயுவை இயந்திரம் மூலம் அகற்றும் பணியானது நடைபெற்று வருகிறது என்றார்.

தொடர்ந்து ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் இதுகுறித்து பேரிடர் மேலாண்மை துறை வல்லுனர் பிரபு காந்தி கூறியதாவது:-

பேரிடர் மேலாண்மை துறை வல்லுனர் பிரபு காந்தி

விஷவாயு தாக்கி உயிரிழப்பு ஏற்படுவது என்பது பாதாள சாக்கடையில் காற்று வந்து அதிகமாக இருக்காது. மூடியை திறந்து சிறிது நேரம் கழித்து தான் சுத்தம் செய்ய வேண்டும். உடனே சுத்தம் செய்தால் ஆபத்து ஏற்பட 200 சதவீதம் வாய்ப்பு உள்ளது.

பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் போது உயிரிழந்தவர்கள் தொடர்பான பதிவுகள் தான் உள்ளது. ஆனால் வீட்டின் கழிவறை வழியாக விஷவாயு தாக்குவது என்பது இதுதான் இந்தியாவில் முதன் முறை. தற்போது மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இது நல்லவிஷயம் தான். இதன் மூலம் பாதிப்புகளை கட்டுப்படுத்த முடியும். இது நிர்வாகத்தின் கவனக்குறைவு தான். தொடர்ந்து சுத்திகரிப்பு பணிகள் செய்தால் தான் இது போன்ற விஷயங்களை தடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article
Leave a review