தலைவர்கள்

எதிர்வரும் இந்திய மக்களவைத் தேர்தலை பொதுமக்களும்,அரசியல் கட்சிகளும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றனர். இந்தியாவில் 543 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் காங்கிரஸ்,பாஜக,கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட தேசிய கட்சிகளின் பங்களிப்பு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. ஆனாலும் கூட மாநில கட்சிகளின் உதவி இல்லாமல் இவர்கள் இயங்க முடியாது என்பதனை பல ஆண்டுகளாக பார்த்து வருகிறோம். அந்த வகையில் வருகின்ற மே மாதத்திற்குள் மக்களவைத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டிய அவசியம் தேர்தல் ஆணையத்திற்கு இருந்து வருகிறது.

அரசியல் கட்சிகள் என்ன வாக்குறுதிகள் கொடுத்தால் மக்கள் நமக்கு வாக்களிப்பார்கள் என்பதில் மும்பரமாக இறங்கி அந்த பணிகளை மேற்கொண்டு வருவதை நாம் அன்றாடம் செய்திகளில் பார்க்க முடிகிறது. அந்த வகையில் இந்த தேர்தலில் யார்? யார்? போட்டியிடப் போகிறார்கள், எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதிகள் ஒதுக்கப்படும் என்கிற கருத்துக்கணிப்புகளும் ஒரு பக்கம் வெளியாகிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக தமிழகத்தை பொறுத்தவரை முப்பத்தி ஒன்பது நாடாளுமன்ற உள்ளடக்கி உள்ளது திமுக, அதிமுக என இது பெரும் திராவிட கட்சிகள் தொடர்ந்து தங்களை நிலை நிறுத்தி வந்த நிலையில் இப்போது பாஜக ஒரு தனி அணியாக உருவாக்கி தேர்தல் களத்தை சந்திக்கிறது.

திமுக கூட்டணியில் கம்யூனிஸ்டுகள்,காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி,கொங்கு மக்கள் கட்சி, முஸ்லிம் லீக் என கூட்டணியில் உள்ள நிலையில் மேலும் சில கட்சிகளில் சேர்வதற்கு வாய்ப்பு உள்ளது. அதேபோன்று அதிமுக கூட்டணியில் அதிமுக,புரட்சி பாரதம், தேவேந்திர குல வேளாளர் கட்சி என ஒரு சில கட்சிகளே அங்கம் வகித்து வந்தாலும் கூட பாமகவை கூட்டணிக்குள் சேர்ப்பதற்கு அதிமுக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் பாமகவின் நிலைப்பாடுகளோ மதில் மேல் பூனையாகவே இருந்து வருகிறது. ஒரு பக்கம் பாஜகவுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது,மற்றொரு பக்கம் அதிமுக உடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது பாமக எந்த அணியில் இணைகிறது என்பதை பொறுத்துதான் அதிமுக கூட்டணி இறுதி செய்யப்படும்,

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகளுக்கு போதிய இடங்களில் ஒதுக்காவிட்டால் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதிமுகவுடன் இணைவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி அதிமுகவுடன் இணையுமாயானால் பாமக பாஜகவுடன் தான் போட்டியிடும் என்பதை மறுக்க முடியாது.இந்த நிலையில் எந்தெந்த தொகுதிகளில் எந்தெந்த வேட்பாளர்கள் நிற்கப் போகிறார்கள் என்பதைப் பற்றி நாள்தோறும் தொடர்ந்து நாம் வெளியிட இருக்கிறோம் இணைந்திருங்கள் த நியூஸ் கலெக்ட் .காம் உடன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here