இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சார்பில் தொழில் துறைக்கான கோரிக்கைகளை நிவர்த்தி செய்யும் வகையில் கோவையின் தேவைகள் எனும் தலைப்பில் கோவை பாராளுமன்றத்தில் போட்டியிடும் அதிமுக, திமுக, பாஜக என 3 வேட்பாளர்கள் ஒரே மேடையில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
அதில் கோவை பாராளுமன்ற பாஜக வேட்பாளர் அண்ணாமலை மட்டும் கலந்து கொண்டு தொழில்துறையினரிடம் மேடையில் பேசினார்.

அப்போது பேசிய அவர்;- கட்சிகள் முக்கியம் அல்ல தலைவர்கள் முக்கியம் என்ற நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். மோடியின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் மக்கள். சிங்கப்பூர் எப்டி லீக்வாங்கி இருந்ததோ அப்படி மோடியை பார்க்கிறார்கள் மக்கள்.
கடந்த 10 ஆண்டுகளில் புதுமையான அரசை நாடு பார்த்துள்ளது. மேலும் 18000 ரூல்ஸ்களை உடைத்து எடுத்துள்ளோம். ஆந்திராவில் பல் சீரான வரிசையில் இருந்தால் தான் மோட்டார் இன்ஸ்பெக்டர் ஆக முடியும்.

கடந்த 50 ஆண்டுகளாக அப்படி இருந்தது. இது போன்ற ரூல்ஸ்களை உடைத்தோம். இன்னும் பல ஆயிரம் விதிகளை உடைக்க வேண்டி உள்ளது. இந்த நாட்டுக்கு அடுத்த 25 ஆண்டுகளுக்கான வாய்ப்பு. இந்தியாவின் இளமையான மக்கள் தொகை. அப்போது 2040 வரை இருக்கும்.
நதிகளை இணைப்பது நமது நீண்ட கால கோரிக்கை. மேலும் 11 லட்சம் கோடி ஒதுக்கி உள்ளோம். எதிர்காலத்தில் 30 லட்சம் கோடி ஒதுக்கப்படும். அப்போது GDP-ஐ உயர்த்த உதவும். அப்போது அடுத்த இந்தியாவை உருவாக்க நமது அரசு உதவும்.

தமிழ்நாடு கோவை என்பது வீடு. தேவைகள் என்பது டைனிங் டேபிள் போல, கியா மொட்டோர்ஸ் முனையம் கோவைக்கு வரும் என தெரிவித்து கொள்கிறேன். நாடாளுமன்றத்திற்கு சென்றால் கோவைக்காக மட்டும் அல்ல.
தமிழ்நாட்டுக்காக பேசுவேன். கோவையை முன்னேற்ற வேண்டும் என்றால் சென்னையின் தொழில் business climate-ஐ மாற்ற வேண்டும். கோவையில் 2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்குகிறோம். இங்கு GDP-ஐ உயர்த்த வேண்டும். மேலும் IIM கோவைக்கு வர பிரதமர் மோடியை வலியுறுத்துவோம்.

இந்தியாவின் அதிகமான வயதானவர்கள் தங்கும் பகுதி கோவையாக உள்ளது. கோவையில் அடுத்த 5 ஆண்டுகளில் வட இந்திய தொழிலாளர்கள் 80% குறைக்கப்படுவார்கள். டாஸ்மாக் ஒரு தலைமுறையை தமிழ்நாட்டில் அழித்து விட்டது. இதனால் மாற்றத்திற்காக நான் இங்கு வந்துள்ளேன்.
நொய்யல் குப்பை மேடாக மாறி உள்ளது. கிளை நதி கௌசிகா நதியில் தண்ணீர் வந்து 15 ஆண்டுகள் ஆனது. மேலும் Scratch இல் இருந்து rebuild செய்து இந்த நகரை மாற்ற உள்ளேன். ஐரோப்பாவின் மோசமான செர்பியாவில் கூட பூங்காக்கள் அதிகளவில் உள்ளன. கோவையில் 12% குப்பைகள் மட்டுமே அழிக்கப்படுகிறது.

மேலும் 88% அப்படியே dump செய்யப்படுகிறது. கோவை விமான நிலைய விரிவாக்த்திற்கு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் பசுமை சாலை கொண்டு வரப்படும். கரூர் கோவை தேசிய நெடுஞ்சாலை அமைத்து தரப்படும். மெட்ரோ கொண்டு வரப்படும். அது தற்போதைய தேவை.
மேலும் 10 மோசமான மாசுபட்ட நதிகளில் தமிழ்நாட்டில் 6 உள்ளன. நொய்யலை மீட்பதற்கு முன்னுரிமை. அப்போது பிரச்னைகளை சரி செய்யும் நபராக பாருங்கள். அரசியல் வாதியாக இல்லாமல் என்னை தலைவாராக பாருங்கள். அப்போது ஜூன் 4,2025-ல் ஜவுளி துறை பிரச்சனைகளை சரி செய்து தருவேன் என தெரிவித்தார்.