நீலகிரி மாவட்டம், அடுத்த கூடலூர் அருகே உள்ள தொரப்பள்ளி சோதனை சாவடி பகுதியில் உலா வந்த ஒற்றை காட்டு யானையை துரத்தியடித்த வளர்ப்பு நாய்.
நீலகிரி மாவட்டம், அடுத்த கூடலூர் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது தொரப்பள்ளி சோதனை சாவடி. இந்த சோதனைச்சாவடி முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி வெளிமண்டல வனப்பகுதியில் அமைந்துள்ளது.

இதனால் தொரப்பள்ளி பகுதியில் அடிக்கடி பகல் மற்றும் இரவு நேரங்களில் காட்டு யானைகள் உலா வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை தொரப்பள்ளி சோதனை சாவடி பகுதியில் உலா வந்துள்ளது.

அப்போது சாலையில் எந்த வாகனங்களின் நடமாட்டமும் இல்லாத நிலையில் சோதனை சாவடி சாலையில் உலா வந்த காட்டு யானையை வளர்ப்பு நாய் குரைத்துக் கொண்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தது.

இருப்பினும் அடிக்கடி தொரப்பள்ளி சோதனை சாவடி பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் உலா வரும் காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் வாகன ரோந்து மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.