கோட்டைமேடு ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள தரிக்கத்துல் இஸ்லாம் ஷாபியா சுன்னத் ஜமாத் சார்பில் வருடா வருடம் சித்திரை மாதத்தில் கோட்டைமேட்டு பெருமாள் கோவில் பகுதியில் உள்ள விளையாட்டு முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற்றது.

அதில் பக்தர்கள் அழகு குத்தி, தீச்சட்டி ஏந்தி, பால்குடம் ஏந்தி பக்தர்கள் வலம் வந்தனர்.

அவர்களுக்கு கோட்டைமேடு பள்ளிவாசல் மற்றும் இஸ்லாமிய பொதுமக்கள் சார்பில்
நள்ளிரவு 12:30 மணியளவில் கேக் மற்றும் கூல்ட்ரிங்க்ஸ், தண்ணீர் பாட்டில் விநியோகிக்கப்பட்டன. இந்த சம்பவம் அனைவரும் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.