மிஸ் கூவாகம்

திருநங்கைகள் அரசு கல்லூரிகளில் பேராசிரியர்களாக இருக்கிறார்கள் எந்த துறையாக இருந்தாலும் அந்த துறையில் சிறந்தவர்களாகவே இருக்க வேண்டும். விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி பேச்சு.

திருநங்கைகள்

தென்னிந்திய திருநங்கையர் கூட்டமைப்பு சார்பில் விழுப்புரத்தில் புதிய பேருந்து நிலையம் அருகே நகராட்சித் திடலில் மிஸ் கூவாகம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வுக்காக தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான திருநங்கைகள் கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவிற்காக விழுப்புரத்தில் குழுமி இருக்கின்றனர். அவர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக மிஸ் கூவாகம் என்கிற நிகழ்ச்சியை தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

பொன்முடி

அமைச்சர் பொன்முடி

நிகழ்வில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார்.இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் பொன்முடி தெருக்கூத்துக்லை தற்போது மறந்து போன கலையாகிவிட்டது. அவற்றை வளர்க்க வேண்டிய அவசியம் எல்லோருக்கும் உள்ளது. தற்போது தமிழக கல்லூரிகளில் திருநங்கைகள் பேராசிரியர்களாக பணியாற்றுகிறார்கள் குறிப்பாக அரசு கல்லூரிகளில் பணியாற்றுகிறார்கள். கல்லூரிகள் வளர்வதற்கு காரணமானவர் முன்னாள் முதல்வர் கலைஞர். எந்த துறையாக இருந்தாலும் அதன் துறையில் சிறந்து விளங்க வேண்டும்.

தமிழகத்தில் திருநங்கைகளுக்கு கல்லூரிகளில் இலவச கல்வி வழங்கப்படுகிறது நல வாரியம் அமைத்துக் கொடுத்தது தமிழக அரசு. திருநங்கைகளுக்கு வாக்குரிமை, குடும்ப அட்டை, மருத்துவ காப்பீட்டு வழங்கியது தமிழக அரசு. வயது முதிர்ந்த திருநங்கைகளுக்கு மாதம் 1500 உதவித்தொகை வழங்கியது திமுக அரசு. இதுதான் திராவிட மாடல் ஆட்சி. அது மட்டும் அல்லாமல் சுயதொழில் செய்ய முன்வரும் திருநங்கைகளுக்கு ரூபாய் 50,000 கடன் உதவி வழங்குகிற அரசு திமுக அரசு.

திருநங்கைகள்

மிஸ் கூவாகம்

இதுபோன்ற பல நலத்திட்டங்களை திருநங்கைகளுக்கு வழங்கிய அரசு திமுக அரசு தமிழக முதல்வர் ஸ்டாலின். என்று பேசினார்.விழாவில் திருநங்கைகள் ஆடல் பாடல் நிகழ்வு நடைபெற்றது அதனைத் தொடர்ந்து மிஸ் கூவாகம் நிகழ்வு நடைபெற்றது.இந்த போட்டி காலை முதலே விழுப்புரத்தில் உள்ள தனியார் திருமன மண்டபத்தில் நடைபெற்று வந்தது.போட்டியின் இறுதி தேர்வு நகராட்சி திடலில் நடைபெற்றது.இந்த போட்டியில் ஈரோட்டை சேர்ந்த ரியா என்கிற திருநங்கை முதலிடம் பெற்றார் அவருக்கு ரூபாய் 50,000 காசோலை வழங்கப்பட்டது. அதனை அடுத்து மேகா என்கிற திருநங்கை இரண்டாம் இடம் பெற்றார். அவருக்கு ரூபாய் 25 ஆயிரம் காசோலை வழங்கப்பட்டது. யுவான் சிலன் ஜான் என்ற திருநங்கை மூன்றாவது இடம் பெற்றார் அவருக்கு ரூபாய் 11000 காசோலை வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற திருநங்கைகளுக்கு கிரீடம் அனிவிக்கப்பட்டு அனைவரும் பாராட்டுக்களை தெரிவித்தனர். ஏராளமான கூட்டம் கூடியிருந்தது.பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்திருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here