மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்பு : மீட்பு பணிக்காக சென்னைக்கு வரும் 400 கோவை தூய்மை பணியாளர்கள்..!

0
79

தமிழகத்தில், மிக்ஜாம் புயல் காரணமாக கனமழையில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை சீரமைக்க கோவை மாநகராட்சியில் இருந்து 400 தூய்மை பணியாளர்கள் பேருந்துகள் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கோவை மாநகராட்சியில் இருந்து முதல் கட்டமாக இன்று 400 தூய்மை பணியாளர்கள் சென்னைக்கு 10 பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

கோவை மாநகராட்சி 400 தூய்மை பணியாளர்கள்

தமிழகத்தில், மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்  உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை காரணமாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் மழை நீர் தேங்கி இருப்பதுடன், மட்டுமல்லாமல், கழிவுகளும் ஆங்காங்கே தேங்கி மழை நீருடன் கலந்து நோய் தொற்று மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக கனமழையில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு மற்றும் சுகாதார சீர்கேடுகளை சீரமைக்க தமிழகம் முழுவதும் இருந்து வரும் தூய்மை பணியாளர்கள் சென்னை , காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பேருந்து மூலம் அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி 400 தூய்மை பணியாளர்கள்

இதனையடுத்து, மிக்ஜாம் புயல் காரணமாக கனமழையில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை சீரமைக்க கோவை மாநகராட்சியில் இருந்து முதல் கட்டமாக இன்று 400 தூய்மை பணியாளர்கள் சென்னைக்கு 10 பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் 5 லாரிகளில் தூய்மை பணிகளுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் தங்குவதற்கு தேவையான பாய், தலையனை , உணவுப்பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள், முதல் உதவி சிகிச்சை பொருட்களும் அதற்கு அனைத்து அடிப்படை வசதிகளும் அனுப்பி வைக்கப்பட்டது. கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், நேரடியாக தூய்மை பணியாளர்களிடம், தூய்மை பணியின்போது மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகளை சொல்லி வழியனுப்பி வைத்தார்.

மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன்

முதல் கட்டமாக 400 பேர் கோவை மாநகராட்சியில் இருந்து அனுப்பப்படுவதாகவும், தேவைப்பட்டால் கூடுதல் தூய்மை பணியாளர்கள் பின்னர் அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்தார். கோவையில் இருந்து செல்லும் குழுவினருக்கு காஞ்சிபுரத்தில் இருந்து எங்கு சென்று பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டுதல்களை அங்குள்ள அதிகாரிகள் கொடுப்பார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here