மகாசிவராத்திரி வருவதை முன்னிட்டு வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறுவதற்கு திரண்டுள்ளனர்.
கோவை மேற்குத் தொடர்ச்சி மலையில் வெள்ளியங்கிரி திருக்கோவில் அமைந்துள்ளது. ஏழு மலைகள் ஏறி சுயம்பு வடிவில் இருக்கக்கூடிய சிவனை தரிசிக்க பக்தர்கள் மலை ஏறுவது வழக்கம். இதில் பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து மே இறுதி வாரம் வரைக்கும் வனத்துறையினர் மலை ஏறுவதற்கு அனுமதி அளிப்பார்கள்.

நிலவின் சுழற்சிக் கணக்கில் ஒவ்வொரு மாதத்தின் 14வது நாள் (அ) அமாவாசைக்கு முந்தைய நாள் சிவராத்திரி என்று வழங்கப்படுகிறது. ஒரு வருடத்தில் வரும் 12 சிவராத்திரிகளில் மாசி மாதத்தில் ( பிப்ரவரி-மார்ச் மாதத்தில்) வரும் சிவராத்திரியை மஹாசிவராத்திரி என்பர். இந்த இரவு ஆன்மீக சாத்தியங்கள் நிறைந்த இரவு.
அன்றிரவு பூமியின் வடக்கு அரைகோளம் ஏற்கும் நிலை, இயற்கையாகவே உங்கள் உயிர் சக்தியை மேல் நோக்கி எழும்பச் செய்கிறது. அதாவது இந்நாளில் ஒருவர் தன் ஆன்மீக சாத்தியத்தின் உச்சி நோக்கி செல்வதற்கு இயற்கை தானாகவே உந்துகிறது.

இதை பயன்படுத்திக் கொள்வதற்காகத்தான் இந்தக் கலாசாரத்தில், மஹாசிவராத்திரியை இரவு முழுவதும் நீடிக்கும் விழாவாக உருவாக்கினார்கள்.
இயற்கையாக மேலெழும்பும் சக்தி தடையின்றி மேல் நோக்கி செல்வதற்கு உதவும் விதமாக, அன்றிரவு முழுவதும் கண்விழிப்பது மட்டுமின்றி, முதுகுத்தண்டை செங்குத்தான நிலையில் நேராக வைத்திருப்பது அவசியம் என்றும் வலியுறுத்தினார்கள்.

இதில் மகாசிவராத்திரி மற்றும் சித்ரா பௌர்ணமிக்கு தமிழ்நாட்டிலிருந்து பல்லாயிரக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம்.
இந்த நிலையில் வருகின்ற வெள்ளிக்கிழமை மகாசிவராத்திரி வருவது எட்டி வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறுவதற்கு திரண்டு இருக்கக்கூடிய காட்சிகள் காணப்படுகிறது.

மேலும் வனதுறையினர் பல்வேறு கட்ட சோதனைக்கு பின்பு பக்தர்களை அனுமதித்து வருகின்றனர். மேலும் பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை தவிர்த்து மலையேறி சாமி தரிசனம் செய்து விட்டு வருமாறு வனத்துறையினர் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
மேலும் வரக்கூடிய நாட்களில் இன்னும் கூட்டம் அதிகரிக்கும் என வனத்துறை தெரிவித்துள்ளனர்.