தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் புதுச்சேரியில் 1 தொகுதியிலும் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) காலை 8 மணி தொடங்கி எண்ணப்படுகின்றன. தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணி 38 இடங்களிலும், பாஜக கூட்டணி, அதிமுக கூட்டணி தலா ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றன.
அதேபோல் விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. மக்களவை தேர்தலின் முதல் கட்டத்தில் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் புதுச்சேரியில் 1 தொகுதியிலும் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) காலை 8 மணி தொடங்கி எண்ணப்படுகின்றன. தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணி 38 இடங்களிலும், அதிமுக 1 தொகுதியிலும், பாஜக கூட்டணி ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றன.
பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி தருமபுரியில் முன்னிலை வகிக்கிறார். பாஜக தனித்து எந்த இடத்திலும் முன்னிலை பெறவில்லை. அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் விருதுநகர் தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்.

அவருக்கு அடுத்த இடத்தில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் இருக்கிறார். பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் மிகவும் பின் தங்கியுள்ளார். தென் மாநிலங்களில் புதிய வீச்சை ஏற்படுத்துவோம் என்று பாஜக சூளுரைத்த நிலையில் தமிழகம், புதுச்சேரி வாக்கு எண்ணிக்கை நிலவரம் மிகுந்த கவனம் பெற்றது.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் திமுக கூட்டணிக்கு அதிக வாக்குகள் கிடைத்தன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வாக்கு எண்ணிக்கையிலும் அதேபோக்கு நீடிக்கிறது.

தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணி 36 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 3 இடங்களிலும், பாஜக கூட்டணி ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றன. அதேபோல் விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.
புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காலை 10 மணி நிலவரப்படி காங்கிரஸ் 7,064 வாக்குகள் பாஜகவை விட கூடுதலாக பெற்று முன்னிலையில் உள்ளது.

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகள் கொண்ட இந்த மக்களவைத் தேர்தலில், திமுக தலைமையில் ஓர் அணி, அதிமுக தலைமையில் ஓர் அணி, பாஜக தலைமையில் ஓர் அணி, நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டி என 4 முனைப் போட்டி உருவாகியுள்ளது.
திமுக தலைமையிலான அணியில் திமுக 22 தொகுதிகளிலும், காங்கிரஸ் தமிழகத்தில் 9 தொகுதிகளிலும், புதுச்சேரியில் ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன. சிபிஐ, சிபிஎம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை தலா 2 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரு தொகுதியிலும், மதிமுக ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன. மக்கள் நீதி மய்யம் கட்சியானது திமுகவுக்கு ஆதரவு அளித்துள்ளது.
அதிமுக அணியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம், புதிய தமிழகம், எஸ்டிபிஐ ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலை எதிர்கொண்டன. இதில், அதிமுக 32 தொகுதிகளில் போட்டியிட, தேமுதிக 5 தொகுதிகளிலும், புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிஐ ஆகிய கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன.

பாஜக தலைமையிலான அணியில் பாமக, அமமுக, தமாகா, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதி கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் இணைந்தனர்.
பாஜக 19 தொகுதிகளில் போட்டியிட்டது. அதோடு, இந்திய ஜனநாயக கட்சியின் பாரிவேந்தர், புதிய நீதி கட்சியின் ஏ.சி. சண்முகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஜான் பாண்டியன், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தேவநாதன் யாதவ் ஆகியோர் பாஜகவின் தாமரைச் சின்னத்தில் போட்டியிட்டனர்.

அந்த வகையில், தமிழகத்தில் தாமரைச் சின்னம் 23 தொகுதிகளில் போட்டியிட்டது. பாமக 10 தொகுதிகளிலும், தமாகா 3 தொகுதிகளிலும், அமமுக 2 தொகுதிகளிலும் போட்டியிட்டன. ஓ. பன்னீர் செல்வம், சுயேட்சையாக போட்டியிட்டார். நாம் தமிழர் கட்சி அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துக் களம் கண்டது.