விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் து.ரவிக்குமார் அவர்களை ஆதரித்து அமைச்சர் பொன்முடி விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட கானை ஒன்றிய கிராம பகுதிகளில் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி போரூர், அனுமந்தபுரம், திருக்குணம், கொசப்பாளையம், அடங்குனம்,‌ வெள்ளையம்பட்டு, பனமலைபேட்டை, உமையாள்புரம், C.N பாளையம்,

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் து. ரவிக்குமார் ஆதரித்து வாக்கு சேகரித்தார் – அமைச்சர் பொன்முடி

புது கருவாட்சி, பழைய கருவாட்சி ஆகிய ஊராட்சிகளில் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகளை சந்தித்தார். இந்‌த‌ கூட்டத்தில் மாவட்ட ஒன்றிய கிளைக் கழக அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய அமைச்சர் பொன்முடி, இந்தியாவில் எந்த அரசும் செய்யாத பல முன்னோடி திட்டங்களை திராவிட அரசு செய்துள்ளது.

விசிக

அப்போது விடியல் பயணம், மகளிர் உரிமைத்தொகை, புதுமைப்பெண் திட்டம் போன்றவை மகளிரின் பொருளாதார சுமையை போக்கி தன்னம்பிக்கையோடும், தன்னிறைவோடும் நீங்கள் யாரையும் சாராமல் வாழ்வதற்கான திட்டம்.

அது மட்டுமின்றி காலை சிற்றுண்டி திட்டம் தாய்மார்களின் சுமையை போக்கி பிள்ளைகளின் பசியை நீக்கியுள்ளது. எனவே திமுக அரசு என்றாலே மகளிருக்கான அரசு தான் என்றார்.

திமுக

பின்னர் அங்கிருந்த சிறுமியை அழைத்து பள்ளியில் காலை சிற்றுண்டி கிடைக்கிறதா, எப்படி இருக்கிறது என விசாரித்தார். அதை தொடர்ந்து நாங்கள் படித்த காலங்களில் இது போன்ற திட்டங்கள் எல்லாம் கிடையாது‌.

அந்த காலகட்டத்தில் என்னுடன் படித்த 16 பேரில் ஒருவர் மட்டுமே பெண். அப்போது பெண்களுக்கு கல்வி என்பது காலங்காலமாக மறுக்கப்பட்டது. அதனை உடைத்தெறிந்து கல்வியை பெண்கள் பெற வேண்டும் என போராடியவர் பெரியார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் து. ரவிக்குமார் ஆதரித்து வாக்கு சேகரித்தார் – அமைச்சர் பொன்முடி

பெரியாரின் பாதையில் அவர் கண்ட கனவை செயல்படுத்தியவர்கள் அண்ணா, கலைஞர். அவர்களின் வழி வந்த முதலமைச்சர் ஸ்டாலினும் பெண்கள் முன்னேற்றத்தில் தனிக்கவனம் செலுத்தி வருகிறார். அனைவரும் சமம் என்பதே திராவிடம். அதுவே திராவிட ஆட்சியின் அடிப்படை.

நமது தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு உற்ற துணையாக உறுதுணையாக இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் ஆதரவு பெற்ற ரவிக்குமார் அவர்களுக்கு பானை சின்னத்தில் மறவாமல் வாக்களியுங்கள் என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here